.

Tuesday, August 21, 2007

சோனியாவின் தெ.ஆ சுற்றுப்பயணம் குறைப்பு.

கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் காந்தி தத்துவம் பற்றி உரை நிகழ்த்துவதற்காக சோனியாகாந்தி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது தெரிந்ததே (முந்தைய சற்றுமுன்)

தொடர்ந்து அவர் டர்பன் நகருக்கு சென்றுபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த போது டர்பன் நகரில் தான் தங்கி இருந்தார். எனவே அந்த இடத்தை பார்ப்பதுடன் காந்தியை இன வெறிகாரணமாக ரெயிலில் இருந்து தள்ளிய பீட்டர்மரிட்ஸ் பார்க் ரெயில் நிலையத்தையும் பார்வையிட சோனியா திட்டமிட்டு இருந்தார்.

காந்தி அமைதி மையத்தையும் தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், இப்போது நடுவண்அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் டர்பன் நகர நிகழ்ச்சிகள் அனைத்தையும் சோனியா தனது நிரலில் இருந்து நீக்கம் செய்து விட்டார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரண மாக பயண நாட்களை குறைத்து கொண்டு இடையிலேயே அவசரமாக நாடுதிரும்புகிறார். எனவே கேப்டவுன் நிகழ்ச்சி முடிந்ததும் ஜோகன்ஸ்பர்க் திரும்பி அங்கிருந்து டெல்லி வருகிறார். சோனியா டர்பன் நகர நிகழ்ச்சிகள் விலக்கம் செய்யப்பட்டு இருப்பதை தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி உறுதி செய்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...