.

Tuesday, August 21, 2007

தமிழகம்: நுழைவு வரியை எதிர்த்து வழக்கு.

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெண்சுருட்டு (சிகரெட்),
பளிங்குகல் (கிரானைட்)) போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு நுழைவு வரி விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனவே 32 வகை பொருட்களுக்கு நுழைவு வரி விதித்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தது ஆனாலும் வழக்கில் சம்பந்தப்படாத நிறுவனங்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பாணை அனுப்ப நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

3 comments:

Boston Bala said...

---வெண்சுருட்டு (சிகரெட்)---

கருப்பு, பழுப்பு என்று விதவிதமாக சுருள்களில் வருகிறதே ;)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சற்றுமுன்னில் தமிழ் ஆதரவுக் கொள்கை ஏதும் இருக்கா? பல செய்திகளில் தமிழ் விளையாடுவதைப் பார்க்க மகிழ்ச்சி. வெண்சுருட்டு நல்ல சொல் தான். பீடி என்ன மொழிச் சொல்? அதுக்குத் தமிழில் என்ன?

வாசகன் said...

----சற்றுமுன்னில் தமிழ் ஆதரவுக் கொள்கை ஏதும் இருக்கா?----

சற்றுமுன்-னுக்கென்று பொதுவாக இல்லாவிட்டாலும் செய்தியாளர்களுக்கென்று இருக்கலாமில்லையா!

இயன்றவரை இனிய தமிழில்...

-o❢o-

b r e a k i n g   n e w s...