ஸீ - தொ.கா. குழுமத்தினரின் இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதால் தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவர் பதவியிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டுள்ளார்.
இன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக தன்னை நீக்குமாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு கபில்தேவ் சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய கிரிக்கெட் அகாதெமியின் துணைத் தலைவராக இருந்த அஜய் ஷிர்கே தற்காலிகமாக பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு செப்டம்பர் 28ல் நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்.
இதற்கிடையே, இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இந்தியாவின் 44 கிரிக்கெட் வீரர்களும், வெளிநாட்டவர்களான பிரையன் லாரா, இன்சமாம், அப்துல்ரஸாக், லான்ஸ் குளூஸ்னர் போன்றவர்களும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது, பாக்கிஸ்தான் வீரர் முகமது ஆசிஃப்புக்கு மூன்று வருட ஒப்பந்தத்திற்கு ரூ.10 கோடி வழங்க லீக் அமைப்பினர் முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது
Tuesday, August 21, 2007
தேசிய கிரிக்கெட் அகாதமி தலைவர் பதவியிலிருந்து கபில் நீக்கம்
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by வாசகன் at 6:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment