.

Friday, August 3, 2007

கர்நாடகத்தில் தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும்.

கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு ஸ்திரமாக இல்லை. இதனால் அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இன்று காலை பெங்களூர் வந்த பிரதமர் தொண்டர்களிடையே உரையாற்றுகையில், அக்டோபரில் ஆட்சிப் பொறுப்பை பாஜகவிடம் ஜனதா தளம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், அக்டோபரில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கர்நாடகத்தில் அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மதக் கலவரங்கள் தான் மிஞ்சின. மக்களை மதத்தின் பெயரால் துண்டாடினார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின் மதசார்பின்மை மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் வென்றுள்ளோம். மதவாத சக்திகளை ஒதுக்கி வைக்க வேண்டியது மிக அவசியம். மதவாதத்தின் அபாயங்களை கர்நாடக மக்களும் உணர்ந்து கொள்வது நல்லது.

மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கூட்டணி அனைத்து விஷயங்களிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போது தான் முதன் முறையாக 9 சதவீத வளர்ச்சியை நாடு கண்டு வருகிறது என்றார் சிங்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...