.

Friday, August 3, 2007

அடுத்த ஆண்டு முதல், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை அரசே வசூலித்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கொடுக்கும்

தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

என்ஜினீயரிங் கல்லூரிகளில் நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. பலர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளனர். சிலர் வாய் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 70 ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 24, 25, 27 மற்றும் ஆகஸ்டு 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் தமிழ்நாட்டில் 159 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

33 கல்லூரிகள்

அவற்றில் 33 கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். இந்த கட்டணம் கல்விக் கட்டணம் மட்டும் தானா? அல்லது பஸ் கட்டணமும் அதில் சேர்ந்துள்ளதா? என்று மேலும் விசாரிக்கப்படும்.

அடுத்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணத்தை அரசே வசூலித்து அதை கல்லூரிக்கு கொடுத்து விடுவோம். அப்படி செய்தால் இப்படி அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு குறைவு.

கடந்த ஆண்டு 13 கல்லூரிகளில் மாணவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு மாணவர்களை மிரட்டியதாக புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வாங்கி கொடுத்து உள்ளோம்.

13 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டமைப்பு குறைவு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவை உள்ளதாக கூறி அண்ணா பல்கலைக்கழகம் அந்த கல்லூரிகளுக்கு நோட்டீசு கொடுத்துள்ளது. என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஆயிரம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பேட்டியின் போது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் ஆர்.சிவகுமார் உடன் இருந்தார்.

தினத்தந்தி

The Hindu News :: Excess fee issue: TN Govt. mulls writing to AICTE: "The colleges included Andal Azhagar engineering college."
33 engineering colleges face derecognition threat

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...