.

Monday, August 20, 2007

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை.

30,000 பேர் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் உள்ள கரன்ஜிடாங் மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள எரிமலை குமுறத் தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எரிமலையிலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு லாவா தீக்குழம்புகள் வழிந்தோடி உள்ளது. மேலும் புகையுடன் கூடிய வெப்பகாற்று தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது லேசாக குமுறத் தொடங்கி இருக்கும் எரிமலை எந்நேரமும் பெரும் சீற்றத்துடன் லாவா தீக்குழம்புகளை கக்கக்கூடும் என்று இந்தோனேசிய எரிமலைகள் ஆய்வுக்குழு தலைவர் சாட் சிமாடுபாங் எச்சரித்துள்ளார்.

1827 மீட்டர் உயரமுடைய இந்த எரிமலையின் அருகே ஐந்து கி.மீ. சுற்றளவில் வசிக்கும் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தீவில் வசிக்கும் அனைவரும் வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரன்ஜிடாங் மலையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு எரிமலையும் சாம்பல் துகள்களை உமிழ்ந்து வருகிறது.

ஆனால் இந்த எரிமலையால் அருகில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து இல்லை என்று இந்தோனேசிய எரிமலைகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...