அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அதிமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. கருணாநிதியை பொருத்தவரை இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தே தீரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் விடாபிடியாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் தெரிந்தே பொய் சொல்வது, உண்மைகளை சொல்லாமல் மறைப்பது, மக்களுக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுவது போன்ற நிலைகளில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்பட்டுள்ளார்.
எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும். இல்லை என்றால் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டியது வரும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment