.

Monday, March 5, 2007

இ மெயிலில் கோர்ட் நோட்டீஸ்

வழக்குகள் விசாரணை தாமதத்தை தவிர்க்க இ-மெயில் மூலம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.

வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால் அது அவர்களது கைக்கு கிடைக்க ஒரு மாதம் வரை ஆகிறது. இந்த கால தாமதத்தை தவிர்ப்பதற்காக இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்சீப் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகளுக்கு லேப்- டாப் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...