பருத்திவீரன் திரைப்படத்தில் குறவர் சமுதாயத்தை கீழ்த்தரமாக காண்பித்திருப்பதை கண்டித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் தூரை ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளார்.
தினமணி
Monday, March 5, 2007
'பருத்தி வீரன்': குறவர் சமுதாயம் எதிர்ப்பு
Posted by சிறில் அலெக்ஸ் at 10:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
பருத்தி வீரன் படத்தில் குறவர்களை கீழ்த்தரமாக காண்பித்ததாக எந்த காட்சியும் என் நினைவில் இல்லை .அப்படியே ஏதாவது ஒரு காட்சியை இவர்கள் சுட்டிக்காட்டினாலும் ,இந்த செய்தியை படிக்கும் வரை இம்மியளவு கூட சிறிதளவேனும் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக என் கவனிப்பில் உணரவில்லை.
என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் சும்மா விளம்பர ஸ்டண்ட்.
ஜோ வின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்! அந்தப் படத்தில் குறவர் சமூதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்றே எனக்கும் தோன்றுகிறது!
//என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் சும்மா விளம்பர ஸ்டண்ட். //
ரிப்பீட்ட்ட்ட்டே...
சற்றும் முன் -னின் செய்தித் தொகுப்புகள் அருமை, உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் வழங்கி சிறப்பித்து வருவது வரவேற்கத்தகுந்தது, குழுவினருக்கு வாழ்த்துக்கள்!!!!
அன்புடன்...
சரவணன்.
பருத்திவீரன் பட வழக்கு சாதியை இழிவு படுத்தவில்லை: என்பதை அறிவிக்கும் சிலைடு; ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஏப். 3-
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, முருகேசன் ஆகியோர் முன் இந்த வழக்கு இன்று விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜர் ஆனார்.
அவர் வாதாடுகையில் "4 அல்லது 5 இடங்களில் சாதி பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. படம் வெளி யாகி 4 வாரம் ஆகியும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறினார்.
சென்சார் போர்டு சார் பில் வக்கீல் வில்சன் ஆஜர் ஆனார். படத்தில் வரும் வசனங்கள் காட்சிகள் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை என்று அவர் கூறினார்.
இதை அடுத்து நீதிபதிகள் கூறும் போது, படத்தின் வசனங்கள் யாரையும் இழி வுப்படுத்தும் வகையில் புண்படுத்தும் வகையில் இல்லை என்று அறிவிக்கும் வகையில் சிலைடு தயாரிக்கும் படி தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு உத்தர விட்டனர்.
இந்த வழக்கு விசாரணை 9-ந் தேதி திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Post a Comment