.

Saturday, May 26, 2007

செல்போனில் இடி இறங்கி 2 பேர் பலி

அவிநாசி, மே 26-
கோவை அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி மீது இடி இறங்கியதில் கட்டட காண்டிராக்டர் உள்பட இருவர் பலியாயினர். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
அவிநாசி தாலுகா செம்பியநல்லூர் கிராமம் மொண்டிநாதம்பாளையம் பிரிவில் கோழிப்பண்ணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியில் காவலாளி அறை கட்டும் பணி நேற்று நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை துவங்கியது.
அப்போது, திடீரென ஒரு இடி இறங்கியது. அப்போது கட்டடத் தொழிலாளி ஜெய்சங்கர் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். செல்போன் வழியாக இடி இறங்கியதால் ஜெய்சங்கர் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அருகில் இருந்த கட்டட கான்ட்ராக்டர் சேகர் (35) என்பவரும் இறந்தார்.

அவினாசி அருகே தனியார் கோழி பண்ணை மீது இடி தாக்கி 2 பேர் இறந்தனர். இடி தாக்கிய கட்டிடத்தை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

- நன்றி: "மாலை முரசு"

1 comment:

சிவபாலன் said...

தயவு செய்து யாரும் திறந்தவெளியில் ( குறிப்பாக பெரிய வீடுகள் இல்லாத இடம்), செல் போன் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...