குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பகுதிக்கு விஜயம் செய்கிறார்.
அங்கு கட்டப்பட்ட உள்ள ஈபிள் டவர் போன்ற கோபுரத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனை புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், இந்த கோபுரத்தை கட்டுவதற்கான முழு செலவையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.
தனது பயணத்தின் போது அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுகாதார காப்பீட்டு திட்டத்தையும் கலாம் தொடங்கி வைக்கிறார். ஏனாம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு மரக்கன்றுகள் அளிக்கும் பசுமை ஏனாம் திட்டத்தையும் அவர் துவக்கிவைக்கிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நான்கு தென் மாநிலங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாவணவர்களுடன் கலாம் உரையாட இருப்பதாகவும் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment