.

Saturday, May 26, 2007

ஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது.

ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூர் மேட்டுகாடு பகுதியில் சந்திரசேகரன் (28) என்ற விவசாயி, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் 55 டெட்டனேட்டர் மற்றும் 110 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் புதுரோட்டை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவர், ராமபட்டினத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தோட்டத்திற்கு அந்த வெடிபொருட்களை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகரன், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து, உரிமம் இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், கடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 comment:

Anonymous said...

இது போன்றவர்களை பிடித்து தீவிர விசாரனை மேற்க்கொண்டு அவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டவிரோதமாக வெடிபொருட்க்களை பதுக்கி வைத்திருபோர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். மேலும் இது போன்று ஒரு இஸ்லாமியன் வெடிப்பொருட்களை கொண்டு சென்றான் என்றால்.மீடியாக்கள் அதை இதை சொல்லி 1/2 மணி நேர செய்தியில் 20 நிமிடத்தை இதற்க்காக ஒதுக்கி படம் காட்டுவார்களே. இன்று எங்கே சென்றார்கள். மானங்கெட்ட மீடியாவினர்.

விடுதலை முருகன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...