ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசிக்க உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார். முதல்வர் பதவியேற்றபின் முதன்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள மாயாவதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலை குறித்து அவர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலை குறித்து, கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தரும், என்றார். இந்நிலையில்,மாயாவதி பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார்.
Saturday, May 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...



No comments:
Post a Comment