.

Friday, May 25, 2007

பதவியை இழக்கவும் தயார் - கருணாநிதி.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக தனது பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.
இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் அவ்ர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற குழுவை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் உறுதிகொண்டிருப்பதாக கூறினார்.இந்தக் குழு அமைந்தால் தான் பிற்படுத்தப்பட்டோரின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை நீதியே குறுக்கீடு செய்கிறது என்றும், இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வகையில் போடப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றமே உடைத்தெறிந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.இட ஒதுக்கீடு கோரி காலங்காலமாக போராடி வருவதாகவும், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறிய கருணாநிதி, இதற்கு பதவி தடையாக இருந்தால் அதைத் துறக்கவும் தயங்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.மாநாட்டில் மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

Anonymous said...

இது போன்று இஸ்லமியர்களுக்கும் இட ஒதுகீட்டுக்காக ஒரு வார்தை சொல்லி இருக்கலாம்... இருந்தாலும் பரவாயில்லை. இஸ்லமியர்களின் உணர்வு தங்களுக்கு நன்றாகவே புரியும். தன்க்களின் நல் வாழ்வுக்கு பிரார்த்திப்போமாக.

ச.சங்கர் said...

"பதவியை இழக்கவும் தயார் - கருணாநிதி."
=

""பதவி தடையாக இருந்தால் அதைத் துறக்கவும் தயங்கக் கூடாது என்றும் தெரிவித்தார்""'

மேலே குறிப்பிட்டிருக்கும் ரெண்டும் ஒரே அர்த்தத்தை கொடுக்கிறதா?

-o❢o-

b r e a k i n g   n e w s...