.

Wednesday, June 6, 2007

சற்றுமுன் 1000 போட்டி மாற்றங்கள் - அறிவிப்பு

அதிகம்பேர்் பங்கேற்கும் வகையில் சற்றுமுன் 1000 போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

செய்தி விமர்சனக் 'கட்டுரை' என்பதற்குப் பதில் கவிதை, கதை, குறும்படம், குரல்பதிவு(Pod casting) என எல்லா வடிவங்களிலும் செய்தியின் அடிப்படையில் பின்னப்பட்ட படைப்புக்களை வரவேற்கிறோம்்கிறோம். படைப்புக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வகைபபாடுகளின்்டுகளின் கீழ் வரவேண்டும்.

போட்டிக்கான வகைகள்:-

அரசியல்
சமூகம்
அறிவியல் /நுட்பம்
விளையாட்டு
பொருளாதாரம்/வணிகம்

பரிசுத் தொகை மாற்றங்கள்.

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 2500/- மதிப்புள்ள புத்தகங்கள் (முன்பு 1500)

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1750/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 1000)

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 500)

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 10 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். (முன்பு 15 பரிசுகளாக இருந்தது)

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 750/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு) - (முன்பு 500)

போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.
போட்டிக்கு படைப்புக்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 30.

மேற்கூறிய மாற்றங்கள் அல்லாத மற்ற விதிகள் முன்பு அறிவித்தவாறே இருக்கும்.

9 comments:

வெட்டிப்பயல் said...

சூப்பர்... கலக்கிடுவோம் ;)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பரிசுத் தொகை மாற்றங்கள் நன்று

கவிதா | Kavitha said...

சூப்பர், பரிசு தொகை மாற்றம்..இப்படி அதிகமாக்கிட்டீங்க.. நம்பவே முடியல...கலக்கறீங்க..

Adirai Media said...

ஆஹா அசத்தீட்டீங்க போங்க.....

உண்மைத்தமிழன் said...

2750 டாலர், 1750 டாலர், 1000 டாலர்ன்னு கொடுத்தாத்தான் என்னவாம்? என்ன இருந்தாலும் சிறில் தலைவா இப்படி கஞ்சத்தனம் பண்ணக்கூடாது..

சிறில் அலெக்ஸ் said...

டாலரா கொடுத்தா காலர் கிழிஞ்சுருமே தலைவா.

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

போட்டிக்கான என் பதிவு இங்கே

நாமக்கல் சிபி said...

/2750 டாலர், 1750 டாலர், 1000 டாலர்ன்னு கொடுத்தாத்தான் என்னவாம்? என்ன இருந்தாலும் சிறில் //

அவர் கிடக்குறார்! விடுங்க! நான் ஏற்பாடு பண்ணுறேன்!

பழனி மலை டாலரா? திருப்பதி டாலரா? எது வேணும்?

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.