அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த 1000 இந்தியர்களை கடந்த வாரம் சவூதி அரேபிய அரசு வெளியேற்றியிருந்தது. அவ்வகையில் மேலும் 750 இந்தியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது.
உம்ரா,ஹஜ் போன்ற புனிதப்பயண நுழைமதியில் வந்து அக்காலகட்டத்திற்கு மேலும் அனுமதியின்றி தங்கிய வெளிநாட்டவர்கள் வெளியேற ஏப்ரல் 2 தொடங்கி ஜூன் 1 வரை பொதுமன்னிப்பு காலத்தை சவூதி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அச்சமயம் 1000 இந்தியர்கள் வரை வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும் 750 இந்தியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்பெசல் உம்ரா ஓவர்ஸ்டேயர்ஸ் செல் ஒன்றைத் தொடங்கி 24 மணி நேர உதவித் தொலைபேசி சேவையையும் அறிவித்துள்ள துணை தூதரகம், இந்தியர்,உம்ரா விசா என்பதற்கான சான்றாதாரங்களுடனும் பயண ஏற்பாடுகளுடனும் வருவோர் இம்மையத்தை தொடர்பு கொண்டால், சவூதி அதிகாரிகளுடன் இணைந்து அவர்களை நாட்டுக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியத் துணை தூதரக ஸ்தானிகர் அவுசாஃப் சயீத் இத்தகவலை பி.டி.ஐ-க்கு அளித்துள்ளார்.
Thursday, June 7, 2007
சவூதி: மேலும் 750 இந்தியர்கள் வெளியேற்றம்!
Labels:
சவூதி
Posted by வாசகன் at 7:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment