.

Thursday, June 7, 2007

ச: காவல் ஆய்வாளருக்கு தீ வைத்துக் கொளுத்தினர்: அதிமுக எம்.எல்.ஏ கைது

விழுப்புரம் கோட்டக்குப்பம் பகுதியில் திருசிற்றம்பலம் கூட்டுச்சாலையில் அதிமுகவினர் வானூர் எம் எல் ஏ கணபதி தலைமையில் முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆய்வாளர் ஜவஹர் அந்தத் தீயை அணைக்க முயன்றபோது கணபதியும் அவரது ஆதரவாளர்களும் ஜவஹர் மீது பெட் ரோல் ஊற்றி தீ வைத்தனர். இருகால்களும் தீயினால் கருகிய நிலையில் ஜவஹர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இது சம்பந்தமாக கணபதி உட்பட ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


DNA - India - Cop set ablaze; AIADMK man arrested - Daily News & Analysis

2 comments:

✪சிந்தாநதி said...

இது குறித்த தினமலர் இணைய தள செய்தி:
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்: சப்இன்ஸ்பெக்டரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

விழுப்புரம் : தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் குதித்தனர். முதல்வர் கருணாநிதியின் உருவபொம்மை எரித்ததை தடுத்த சப்இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

மது குடிக்கும் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்புவதையும், கொடநாடு எஸ்டேட்டில் ரெய்டு நடத்தியதையும் கண்டித்து தமிழகம் முழவதும் இன்று அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் குதித்தனர். சென்னை குறளகம் முன்பு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கருணாநிதி கொடும்பாவியை எரித்தனர். நகரின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே திருசிற்றம்பலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து முதல்வர் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்தனர். இதனை தடுக்க முயன்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜவஹர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதில் அவரது இரண்டு கால்களும் கருகின. இதையடுத்து ஜவஹரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

வேலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். திண்டுக்கல்லிலும் போலீஸ் தடியடி நடந்தது. திருநெல்வேலியில் முதல்வர் கருணாநிதி கொடும்பாவி எரித்த 150 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் அதிகமானோர் திரண்டு வந்து கருணாநிதி உருவபொம்மையை எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியல் செய்த 250 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த போராட்டம் நடந்தது.

இந்த திடீர் போராட்டத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

Subramanian said...

1965ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்,கோவையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை உயிருடன் எரித்துக் கொன்ற சில திமுகவினர் தற்போது மொழிப்போராட்டத் தியாகிகள் என்ற பட்டத்துடன் மாதா மாதம் தமிழக அரசிடமிருந்து தியாகிகளுக்கான உதவித் தொகை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
இது வரலாறு காட்டும் நிதர்சனமான உண்மை.
நாளைய வரலாறு என்னவாக இருக்கும்?

-o❢o-

b r e a k i n g   n e w s...