இலங்கை போலிஸ் இன்றுமுதல் தலைநகர் கொழும்புவிலிருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றத் துவங்கியுள்ளது. தமிழ் ஈழப் புலிகளின் ஆதரவாளர்களாக சந்தேகிக்கப் படுபவர்களை கண்டறிய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இரவு துவங்கி இலங்கை போலீஸ் 'ரெய்ட்' நடத்தி நூற்றுக்கணக்கில் தமிழர்களை பஸ்களில் ஏற்றி வடக்கு அல்லது கிழக்கு மகாணங்களை நோக்கி அனுப்பிவைத்தது. 'போதிய காரணமின்றி' கொழும்புவில் தங்கியிருக்கும் தமிழர்களை திருப்பி அனுப்புவதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.
குறைந்த விலை லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் பலரும், தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுமாக மொத்தம் 376பேர் இதுவரை வெளியேர்றப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன. 'இனச் சுத்தீகரிப்பு நடவடிக்கை இது' என அவர்கள் வர்ணித்துள்ளனர்.
Police evict Tamils from Colombo BBC News, UK
Sri Lanka begins forced eviction of Tamils from Colombo
Police evict Tamils from temporary lodges in Colombo
Thursday, June 7, 2007
கொழும்புவிலிருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்
Labels:
இலங்கை,
ஈழம் - இலங்கை,
உலகம்
Posted by சிறில் அலெக்ஸ் at 5:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
இப்பதிவு "சற்றுமுன்"னான சம்பவமில்லையே, பல பதிவர்களினால் ஏற்கனவே வாசிக்கக் கிடைத்து விட்டது, புதியன இல்லையா?
அப்ச்ட்1234கொழும்பில் உள்ள தமிழர்களை வடக்கு, கிழக்கு மாகாண்ங்களுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானது என்று அரசாங்கமே ஒப்புக்கொள்கிறது.
//இப்பதிவு "சற்றுமுன்"னான சம்பவமில்லையே, பல பதிவர்களினால் ஏற்கனவே வாசிக்கக் கிடைத்து விட்டது, புதியன இல்லையா?//
சிலருக்காவது இது புதியதாக இருக்குமே என்றுதான் போட்டேன். 8 முதல் 12 மணி நேரத்திற்குள்ளான செய்திகள் சற்றுமுன் செய்திகளாக கருதப்படுகின்றன.
:))
இதில் இன்னொரு பிரச்சனை நாங்கள் வாசிக்கும் செய்தித் தளங்களில் இந்த செய்தி எப்போது வருகிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது.
விளக்கம் போதுமா?
:))
மேலும் இதுபோன்ற முக்கிய செய்திகள் எல்லாருக்கும் போய் சேர்வது நல்லது. கிட்டத்தட்ட 70 பேர் சற்றுமுன் செய்திகளை மின்மடல் மூலம் பெறுகிறார்கள்.
Post a Comment