.

Thursday, June 7, 2007

தலித் எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பிடிவாரண்ட்

கடலூர் அருகே வீடுகளுக்கு தீ வைப்பு, போலீஸ் மீது தாக்குதல் வழக்கு தொடர்பாக காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ ரவிக்குமார், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வார்டு பாபு ஆகியோருக்கு கடலூர் மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்து உள்ளார்.

கடலூரை அடுத்த சேடப்பாளையம் அருகே எஸ்.என்.நகர் காலனி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிவா (25), ஒரு கோஷ்டியினரால் தாக்கப்பட்டு 2-1-2007-ல் இறந்தார். சிவாவின் இறுதி ஊர்வலத்தில் சேடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வீடுகள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ ரவிக்குமார், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வார்டு பாபு, கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், செல்வன், அமுதன், குணசேகரன், ஞானம், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு கடலூர் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எம்எல்ஏ ரவிக்குமார், கெய்க்வார்டு பாபு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், திங்கள்கிழமை பிடிவாரண்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் கலைமதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தாமரைச்செல்வன் செவ்வாய்க்கிழமை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் விடுதலை ஆனார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...