முன்னாள் அதிமுக எம்.பி. விஸ்வநாதனுக்குச் சொந்தமான வேலூர் தொழில்நுட்பக் கழக நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் (விஐடி) நேற்று வருமான வரி சோதனை நடந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாக இருந்தவர் விஸ்வநாதன். இவர் தற்போது வேலூரில், வேலூர் தொழில்நுட்பக் கழகம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) என்ற பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தின் தலைசிறந்த தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்த நிலையில் வி.ஐ.டியில் நேற்று அதிரடியாக வருமான வரி சோதனை நடந்தது. நேற்று காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் என்ன கிடைத்தது என்பது குறித்து அதிகாரிகள் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதேபோல வேலூரில் உள்ள 2 ஹோட்டல்கள், மின்னணு பொருட்கள் விற்பனை நிலையம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஊர்களிலும் வருமான வரி சோதனை நடந்தது.
Thursday, June 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment