.

Thursday, June 7, 2007

மதுரை:மதிமுக பிரமுகர் திடீர் வேட்பு மனு.

கட்சியை விட்டு நீக்கி வைகோ அதிரடி.

மதுரை மேற்குத் தொகுதியில் மதிமுகவைச் சேர்ந்த மகுடபதி என்பவர் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி வைகோ உத்தரவிட்டார். மதுரை மேற்குத் தொகுதியில், நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமரன், பாஜக சார்பில் சீத்தாராமன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக இன்று ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டார். இத் தொகுதியில் அதிமுகவை மதிமுக ஆதரிக்கிறது. இந் நிலையில் இன்று காலை மதிமுகவைச் சேர்ந்த மகுடபதி என்பவர் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. மகுடபதி மனு தாக்கல் செய்தி அறிந்ததும் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மகுடபதி கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய வகையிலும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...