.

Thursday, June 7, 2007

சவூதி: வெளிநாட்டவருக்கான புதிய முதலீட்டு வழிகள்.

தனது நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கான புதிய முதலீட்டு வழிகளைத் திறப்பது பற்றி சவூதி அரேபிய அரசு ஆலோசித்து வருகிறது.

பத்திரிக்கை குறிப்புகளின் படி, இந்நாட்டில் பணிபுரியும் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வருடம் ஒன்றுக்கு சவூதி ரியால் 100 பில்லியன் ($26.6 பில்லியன்) என்ற அளவில் தத்தம் நாட்டுக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

உழைத்து சம்பாதிக்கிற பணத்தை விருப்பப்படி செய்யும் உரிமையை மதித்தும், பரஸ்பர பயன்களை கணக்கில் கொண்டும், முதலீட்டு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று சவூதி அரேபிய வணிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் சவூதி பங்குச்சந்தையில் ஈடுபடலாம் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவூதியிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட தொகை பத்து சதவீதம் அளவு குறைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

"தேவையான வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கப்பட்டால், வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சியுடன் சவூதியில் முதலீடு செய்வர்" என்று ஏர் இந்தியாவின் சவூதி அரேபிய மக்கள் தொடர்பாளர் விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...