.

Monday, June 18, 2007

தொழில்நுட்பக்கோளாறு: இந்தியன் விமானம் தரையிறக்கம்.

IC 860 என்கிற 'இந்தியன்' விமானம் ஒன்று 109 பயணிகளுடன் தில்லிக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. வானில் பறந்த 30 நிமிடங்களில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறை கண்டுணர்ந்த விமானி, புறப்பட்ட சிங்கப்பூர் நிலையத்துக்கே தரையிறங்க வைத்தார். இது ஏர்பஸ் A-320 வகை வானூர்தியாகும்.

மேலும் படிக்க...

3 comments:

வடுவூர் குமார் said...

அந்த 30 நிமிடங்களுக்கு பணம் கேட்டார்களா?:-))

வடுவூர் குமார் said...

போன வெள்ளி இரவு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் கால தாமதமாக புறப்பட்டது,அதற்காக பயணிகளை வெளியிலேயே நிற்க வைத்துவிட்டார்கள்.திருச்சி விமான நிலையத்தில் வெளியில் உட்கார வசதிகிடையாதாம்.என்ன நடக்கிறது என்பதை பயணிகளுக்கு சொல்ல எவரும் இல்லை. :-((
அடுத்து சென்னை.. 2 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் வந்ததே லேட் என்பதால் கிளம்புவதும் கால தாமதம் ஆகிவிட்டது,அதிலும் கொடுமை என்னவென்றால் எல்லாரும் ஏறிய பிறகு விமான த்தில் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டு எல்லோரையும் இறக்கி வேறு விமானத்தில் ஏற்றி கிளம்பும் போது காலை மணி 5.
என்ன சந்தோஷம்,கோளாறை கீழேயே கண்டுபிடித்தது தான்.
இது என் நண்பரின் அனுபவம்.
"இந்தியன்" சீக்கிரம் பாருங்க ஏனென்றால் கூடிய சீக்கிரம் "டைகர் ஏர்வேஸ்" சென்னை உட்பட பல இந்திய நகரங்களுக்கு விமான சேவை சிங்கையில் இருந்து தொடங்கப்போகிறது.

Anonymous said...

வ.குமார்,
நீங்கள் சொல்வது சரிதான். 'இவர்களின்' சேவை மிகவும் மோசம்.
வளைகுடா, குறிப்பாக செளதியில், கன்ஃபர்ம் செய்து டிக்கெட்டெல்லாம் எடுத்து ரீகன்ஃபர்ம் செய்தவர்களுக்கும் திடீரென்று சீட்டை கேன்சல் செய்துவிட்டு அதிகவிலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் 'இந்தியனுக்கு' இந்தியன் ஆதரவு இல்லை என்று புலம்ப மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்

-o❢o-

b r e a k i n g   n e w s...