.

Thursday, June 14, 2007

அரங்கதிலிருந்து விளையாட்டை வலைப்பதிந்தவருக்கு கல்தா கொடுத்தார்கள்

அரங்கில் நடக்கும் பேஸ்பால் ஆட்டத்தை நேரடியாக வலைப்பதிவது சட்டப்படி குற்றம் என்று கூறி விளையாட்டை கண்டுகளித்துக் கொண்டிருந்த நிருபர் வெளியேற்றப்பட்டார். அமெரிக்கக் கல்லூரிகளுக்கு இடையே NCAA மண்டல சுற்றுப் போட்டியில் இது நடந்தது.

கென்டக்கி மாகாணத்தின் லூயிவில்லில் இருந்து வெளிவரும் கொரியர்-ஜர்னல் (Courier-Journal) பத்திரிகை நிருபர் இதற்கு முன்னரும் பல முக்கிய ஆட்டங்களுக்கு நேரடி வர்ணனை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chicago Tribune | Hypertext | Newspaper blogger ejected from NCAA game

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவுலகிலேயே முதல் முறையாக நேரடி வர்ணனைப் பதிவு போட்ட கொத்தனாரே! - இந்தச் செய்தியைப் படீச்சீங்களா? :-))

வவ்வால் said...

மீடியா பார்ட்னெர் என்று சிலருக்கு செய்தி வெளியிடும் உரிமை தரப்படுகிறது எனவே அது போல் காரணங்களால் வெளியேற்றப்பட்டிருக்கலாம்.மேலும் அவர் தனியார் வலைமனை(web site) செய்தி நிருபர் போல் நீங்கள் சொல்லியுள்ளீர்கள் ஆனால் வலைப்பதிவர்(blog) என தலைப்பிட்டுள்ளீர்கள்.

"குற்றம் நடந்தது என்ன?" ...

Boston Bala said...

---The Louisville Courier-Journal and its writer, Brian Bennett, contend that he was offering instant analysis, not simply a regurgitation of the facts of the game---

என்னுடைய புரிதலின் படி, உள்ளூர் செய்தித்தாள் நிருபர், தங்களுடைய வலையகத்திற்காக, உடனடி அலசல் (தகவல்கள்) கொடுத்ததை தடுத்திருக்கிறார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...