.

Thursday, June 14, 2007

ஒரே மேடையில் இருபெண்களை மணந்தவர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கல்யாணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (32). இவர் ஒரு விவசாயி. இவருக்கும், பக்கத்து வயலைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகள் சகுந்தலாவுக்கும் (24) காதல் மலர்ந்தது. நெருங்கிப் பழகிய இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்னொரு காதலில் வீழ்ந்தார் ஏழுமலை. ஏழுமலையின் வீட்டுக்கு அருகில் உள்ள அண்ணாமலையின் மகள் நாகம்மாள் (23) என்பவரையும் 'சைட் பை சைடாக' காதலிக்க ஆரம்பித்தார் ஏழுமலை.

ஏழுமலையின் இரட்டைக் காதல் அவரது இரு காதலிகளுக்கும் தெரிய வந்தது. ஏழுமலையை நேரில் சந்தித்த இருவரும் எங்களில் யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு படு தெளிவாக, இரண்டு பேரையும்தான் என்று கூறியுள்ளார் ஏழுமலை. இதையடுத்து இரு பெண்களும் சமாதானமடைந்தனர், சம்மதமும் கொடுத்தனர்.

ஆனால் இரு பெண்களின் வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி ஒருவரே இரு பெண்களையும் மணப்பது என அவர்கள் ெகாதித்தனர். ஆனால் ஏழுமலையின் குடும்பத்தினர் இரு பெண்களின் வீட்டாரையும் சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து கடந்த 3ம் தேதி மூன்று வீட்டாரும் கூடி பேசி திருமண தேதியை முடிவு செய்தனர். ஒரே நாளில், ஒரே முகூர்த்தத்தில், ஒரே மேடையில் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 3ம் தேதி இடப்புறம் அமர்ந்திருந்த சகுந்தலாவுக்கும், வலப்புறம் அமர்ந்திருந்த நாகம்மாளுக்கும் மாறி மாறி தாலி கட்டி அசத்தினார்.

இந்த வித்தியாச திருமணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏழுமலை ரஜினி ரசிகராம். இதனால் அவரது நண்பர்கள் வைத்த கல்யாண விளம்பர டிஜிட்டல் போர்டில் ரஜினிகாந்த் ஏழுமலை மற்றும் இரு மணமகள்களையும் ஆசிர்வாதம் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

தட்ஸ்தமிழ்

4 comments:

Anonymous said...

ரொம்ப தைரியமான ஆளுதான்

வெங்கட்ராமன் said...

கொடுமடா சாமி.

சம்பந்தப் பட்ட மூனு குடும்பத்திலயும் யாருக்கும் மூளையே இல்லையா . . . . . . . . .?

/////////////////
ஏழுமலை ரஜினி ரசிகராம். இதனால் அவரது நண்பர்கள் வைத்த கல்யாண விளம்பர டிஜிட்டல் போர்டில் ரஜினிகாந்த் ஏழுமலை மற்றும் இரு மணமகள்களையும் ஆசிர்வாதம் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.
/////////////////

ரஜினிய அசிங்க படுத்த இவிங்க போது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதற்குச் சட்டத்தில் இடம் உண்டா?
இப்படிப் ஒரு பெண் செய்யமுடியுமா?

Anonymous said...

//
இப்படிப் ஒரு பெண் செய்யமுடியுமா?//

அவசியமில்லை.
ஆண் செய்வதையெல்லாம் பெண் திரும்பச்செய்வதல்ல, பெண்ணுரிமை என்பது!
உண்மையான பெண்ணியச்சிந்தனை, ஆணை அவனின் தவறுகளிலிருந்து மீட்பதாக இருக்க வேண்டுமேயல்லாது,
தவறை தவறால் போர்த்துவதாக அமையக்கூடாது.
இப்படிப்பட்ட சிந்தனைகளே பெண்ணியச்சிந்தனைகளுக்கு தவறான பாதை காட்டுகின்றன.

-o❢o-

b r e a k i n g   n e w s...