.

Tuesday, June 26, 2007

கோயிலைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ; கழுவி விட்ட பி.ஜே.பி

இராமேஸ்வரத்தின் இராமநாதஸ்வாமி கோயிலை, அதன் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசலைப் பார்வையிட்டார் இராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிநிதி எம்.எல்.ஏ ஹசன்அலீ (காங்கிரஸ்).

இராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர் ராஜாமணி கூறுகையில் "ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் கோயில் கோபுர விரிசல் பற்றி எடுத்துக்கூறவே, நேரில் பார்வையிட கருதி; அதன்படிசெய்தார் எம்.எல்.ஏ"

ஹிந்து அல்லாத அவர் (எம்.எல்.ஏ) கோயிலுள் நுழைந்ததை விரும்பாத பாரதீய ஜனதா, வி.ஹெச்.பி, சிவசேனா கட்சிக்காரர்கள் கோயிலுக்கு பரிகார பூசை செய்து கழுவி விட்டுள்ளனர் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அதே கோயிலில் நிகழ்வுற்ற சமபந்தி போஜனத்திலும் எம்.எல்.ஏ கலந்துண்டதாக இச்செய்தி கூறுகிறது

3 comments:

SurveySan said...

brilliant display of Brahminical ARROGANCE, once more.

G.Ragavan said...

கொடுமை. மிகக் கொடுமை. இவர்களின் மனதை யா கழுவி விட?

Thangamani said...

நல்ல செய்தி!

அப்துல் கலாம் காலைக் கழுவிக்கொண்டே இங்கு கோவிலைக் கழுவுவது அற்புதம்!

ஜெய் ஹிந்த்!

-o❢o-

b r e a k i n g   n e w s...