.

Wednesday, July 4, 2007

சிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே.

"வந்து கொண்டேயிருக்கிறது டைகர் ஏர்வேஸ்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நமது 'சற்றுமுன் வாசகர்' வடுவூர் குமார் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.

ஆம். சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான சேவையான 'டைகர் ஏர்வேய்ஸ்' அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கான தனது சேவையை டைகர் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்குகிறது. அதன்படி, வரிகள் உள்பட 200 சிங்கப்பூர் டாலர் மட்டும் கட்டணமாக செலுத்தி இந்தியாவுக்கு பயணிக்க முடியும்.

சென்னை, கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட 6 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை மேற்கொள்ளும்.

அக்டோபர் 28ம் தேதி சென்னைக்கு தனது முதல் பயணத்தை டைகர் ஏர்வேஸ் விமானம் மேற்கொள்கிறது. அக்டோபர் 30ம் தேதி கொச்சிக்கான சேவை தொடங்கப்படுகிறது.

சென்னைக்கு வாரம் நான்கு முறையும், கொச்சிக்கு வாரம் மூன்று முறையும் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக விமான சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

தென் கிழக்கு ஆசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 20 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான நாடாக உருவாகி வருவதால் சிங்கப்பூரைச் சேர்ந்த பல விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன.

1 comment:

வடுவூர் குமார் said...

சும்மா குமாங்குத்தா நவம்பர் மாதத்தில் போய் வர எவ்வளவு ஆகும் என்று பார்த்தேன்..விடை 356.47 சிங்கப்பூர் வெள்ளி.வரியோடு.
ஆனால் இடிப்பது தூக்கிப்போகும் எடையின் அளவு.வெறும் 15 கிலோ தான்,இன்னும் 15 கிலோ மேலே என்றால் 50 வெள்ளி கூடுதலாக கட்டவேண்டும்.
போய் வரும் நேரம்... சும்மா அட்டகாசமான நேரங்கள்.வேலையை முடித்துவிட்டு கிளம்பலாம்,அங்கிருந்து வந்தவுடன் வேலைக்கும் போகலாம்.
தீபாவளிக்கு இப்பயே புக் பண்ணலாமா என்று யோசிக்கிறேன்.
மற்ற நிறுவனங்களின் பதில் என்னவாக இருக்கும்?

-o❢o-

b r e a k i n g   n e w s...