கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக மாநில பா.ஜ. தலைவர் இல.கணேசன் எச்சரித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் பாரதியார் பல்கலைக்கழக வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி அப்துல் கலாம் முன் னிலையில் நடந்த இந்த விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் புத்தகங்களை முதல்வர் கருணாநிதி வெளி யிட்டார்.
இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் சேரும் மாணவர்
களுக்கு மனித சிறப்பாளுமை பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தில் இந்தப்பாடம் உள்ளது. இதில் பகுத்தறிவு என்ற பகுதியின் கீழ் வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகள் அடங்கிய இந்தப் புத்தகத்தில் தனி மனித மேம்பாடு, பெண்ணியம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபற்றி பா.ஜ. மாநில தலைவர் இல.கணேசன் கூறுகையில், வீரமணியின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது கண்டனத்துக்குரியது. அதில் இளைய தலைமுறையினருக்கு நன்னெறி கருத்துகளை தெரிவிக்கக்கூடிய விஷயங்கள் ஏதும் இல்லை. கூட்டுக்குடும்ப முறை, பூஜை பழக்க வழக்கங்கள், பாலியல் கல்வி, திலகர் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துகள் சரியானதல்ல. புத்தகத்தின் இறுதியில் பகுத்தறிவு பிரசார பணியில் சேர விருப்பம் உள்ளதாக திராவிடர் கழகத்தில் சேர்வதற்கான உறுப்பினர் படிவம் இடம் பெற்றுள்ளது. (பகுத்தறிவு பணியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவிப்பதற்கான படிவம்)இதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது புரியவில்லை. பாடத்திட்டத்தில் இருந்து இதை நீக்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
ஆனால், இந்தப் பாடங்களை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மனிதனுக்கு தேவையான சுயமரியாதை, பகுத்தறிவு சிந்தனை ஊட்டும் கருத்துக்கள்தான் வாழ்வியல் சிந்தனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு நன்கு அலசி ஆராய் ந்து அதில் நல்ல கருத்துகள் இருப்பதை உறுதி செய்த பிறகே, பா டத்திட்டத்தில் சேர்ப்பதற்கு உரிய ஒப்புதல் கிடைத்துள்ளது. ஒரு ஆசிரியரோ, புத்தகமோ நல்ல கருத்துகளைத் தெரிவித்தால் அதை மட்டுமே ஏற் றுக்கொள்ள வேண்டும். அவரது பின்னணிகள் குறித்து ஆராயக்கூடாது. பல அறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுதான் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நீக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்றார் அவர்.
Wednesday, July 4, 2007
வீரமணி எழுதிய நூலை பாடத்திட்டத்தில் சேர்க்க பா.ஜ. எதிர்ப்பு
Labels:
தமிழ்நாடு
Posted by சிவபாலன் at 1:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
நன்றி: மாலை முரசு
நாங்கள் படித்த போது "ச்க்ரவர்த்தித் திருமகன்" என்ற புத்தகத்தைப் படிக்கச் சேர்த்தார்கள்.அதன் முன்னுரையில் இதைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.நம்ப வேண்டுமே தவிரக் கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது,என்று எழுதியிருந்தார் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.
நல்ல வேளை வந்துள்ளது தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு.கேள்விகள் கேட்டு,அதற்கு உலக அறிஞர்களின் சிந்தனைகள் பல வடித்துக் கொடுக்கப் பட்டுள்ள நூல்கள் படிக்க வைத்துள்ளனர்.அந்த வாழ்வியல் சிந்தனைகள் பல உலக அறிஞர்களின்,பல் வேறு வாழ்வு நிலைகளில் மனிதர்கள் எண்ணங்கள்,செயல்கள் என்பவை தேன் போல் சேகரித்துத் தரப் பட்டுள்ளன்.
இது ஒரு புத்தகப் புழுவின் வெளிப்பாடாக இல்லாமல்,பகுத்தறிவின் வார்ப்பாக இருக்கிறது.தனி மனித,குடும்ப,குழந்தைகள்,பெரியோர் ,நாட்டு நலன் என்று அனைவர் நலனும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் வாழ்க்கை வழிகாட்டியாக வார்த்தை அழகுடன் பின்னப் பட்டிருக்கிறது.
இந்த நூலுக்கு விளம்பரம் தேடித்தர வந்துள்ளப் பிற்போக்குக் கும்பலுக்குப் பகுத்தறிவு வாதிகளின் நன்றிகள் உரித்தாகுக.
வீரமணி புத்தகத்தில் பிள்ளையார் சுழி இல்லையோ ?
:))
ஜோசியத்தை பாடமாக வைக்கத் துணிந்த இந்த தரித்திரம் பிடித்த பிஜேபியினரை என்ன தான் செய்வது?
Post a Comment