.

Thursday, July 12, 2007

ஒரு ஆரிய சக்தி - திராவிட சக்தி - கருணாநிதி

அண்ணா அறிவாலய வளாகத்தில் மதிமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் சபாபதி மோகன் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களுமாக 250க்கும் மேற்பட்டவர்கள் இன்று கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று கருணாநிதி பேசியதாவது

திமுகவை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது

வருங்காலத்தில் திமுக இந்தியா வில், குறிப்பாக தென்னிந்தியாவில் அரசியல் நிலைப்பாட்டை நிர்ண யிக்கும் மாபெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்பது தான் என் வாழ்நாள் ஆசை.

தமிழகத்திலுள்ள திராவிட கட்சிகள் பொது பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை போல ஒன்றிணைந்து செயல்பட நான் விரும்பினேன். ஆனால் ஒரு ஆரிய சக்தி, திராவிட சக்தி என்ற பெயரிலே அதற்கு தடையாக இருந்தது உங்களுக்கு தெரியும்.

இது போன்ற ஆரிய மாயைகளை விரட்ட வேண்டும் என்று தான் பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் பாடுபட்டார்கள். அந்த ஆரிய மாயையை வீழ்த்துவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்"

3 comments:

Anonymous said...

இருந்தது?

யார் அந்த் ஆரிய சக்தி? புரியவில்லை.

சிவபாலன் said...

கருத்துப்படம் தினமணியின் அப்பட்டமான சார்பு நிலை! :)))))

Thamizhan said...

திராவிட இனம் ஒன்று படுவதையோ முன்னேறுவதையோ ஆரிய இனம் எந்த வகையிலாவது தடுத்தே வந்துள்ளது.
படிப்பிலும்,வேலை வாய்ப்பிலும் மக்கள் தொகையில் மூன்றே விழுக்காடு உள்ளவர்கள் எப்படி முழுமையாக அனுபவித்தார்கள் என்பதை அலசிப் பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மண்டலின் விவரமான் அறிக்கையைப் படித்தால் புரியும்.
மகாத்மா ஜோதி பாபுலே,சாகு மகராஜ்.நாரயணகுரு,பெரியார்,பாபா
சாகேப் அம்பேத்கர் போன்றோரின் மனித நேயப் பணிகளால் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது நடு
நிலையிலிருந்து பார்க்கும் அனைவர்க்கும் நன்கு விளங்கும்.
ஜாதி ஒழியவேண்டும் என்பதில் எந்த மனித நேயப் பற்றாளருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.
அதன் அடிப்படையான இந்து மத வெறியர்களிடம் மனு தர்மம் பேசுவோரிடமும்,வார்த்தை ஜால்ங்களால் வர்ணாசிரமத்தைக் காக்க முற்படுவோரிடமும் எப்படி அறிவுடையவர்கள் அடிமைகளாகி விடுகின்றன்ர் என்பதுதான் அரசியல்.
திராவிடர் என்றாலே உடலெல்லாம் எரியும் சோ,ராம்,குருமூர்த்திகளும் அவர்களைச் சார்ந்தோரும் இன்னமும் வக்கிரபுத்தியுடன் அலைவது ஒன்றே
இந்து மதத்தை வைத்துக் கொண்டு சாதியை ஒழிக்க முடியாது என்பதற்குப் போதுமான் ஆதாரம்.
வட இந்தியாவில் இந்து மத வெறி அதிகம்.இஸ்லாமிய எதிர்ப்பை வைத்து இந்துத்துவா பிழைப்பை ந்டத்துகிறது,கிருத்துவ எதிர்ப்பும் அவ்வப்போது உண்டு.
அனைவரும் சமம்,பெண்கள் முன்னேற்றம் என்று இந்தியாவில் வர
திராவிட இனக் கொள்கைகளில் உள்ள மூட ந்ம்பிக்கை ஒழிப்பு,சாதி ஒழிப்பு அவசியம் பரவ வேண்டும்.
இதிலே திராவிடத் தலைவர்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதையே வழக்கமாகக் கொண்டவர்கள் சிந்திக்க வேண்டியது,யாரிடம் குறை இல்லை என்பது தான்.
காந்தியார் போற்றிய கோபால கிருஷ்ண கோகலே முதல்,காந்தியார்,நேரு,படேல் யார் மீது குறை இல்லை?
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்பவர்கள் யார்?குறை சொல்ல வாருங்கள்.
இன்றைய சூழ் நிலையில் இந்தியா உண்மையாக முன்னேறத் திராவிட மனித நேயக் கொள்கைகளை,இந்து மத மூட ந்ம்பிக்கை ஒழிப்பை,பெண்கள் முன்னேற்றத்தைக் கடைப் பிடித்துச் சட்ட மாக்கி வளர்வதைத் தவிர வேறு வழி ஏது?
ஆரியச் சக்திகள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக் கற்கள்,அழிவுப்பாதை என்பதைத் தான் தனது அநுபவப் பூர்வ உண்மையாகக் கலைஞர் வெளியிட்டுள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...