பால்வெளி (Milky Way) என்றழைக்கப்படும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே, மற்றொரு சூரிய மண்டலத்தில் துணைக்கோள் ஒன்றை அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அக் கோளை `ஸ்பிச்சர் ஸ்பேஸ் டெலஸ்கோப்' என்ற அதிக சக்தி கொண்ட தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தனர்.
அந்த கோளின் வான் பகுதியில் நீர் ஆவியாக நின்றது தெரியவந்தது. எனவே அந்த கோளில் நீர் இருக்க வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கோளுக்கு பெயர் வைக்கவில்லை. `எச்.டி.189733 பி' என்ற குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 64 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஒரு வருடம் முழுவதும் பயணம் செய்வதை குறிப்பிடுவது ஆகும்.
வாசித்த இடம்
Thursday, July 12, 2007
சூரிய மண்டலத்துக்கு வெளியே நீருள்ள கோள்.
Posted by வாசகன் at 12:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
8 comments:
எனக்கு தெரிந்த வரை
சூரிய மண்டலம் = Solar system
அண்டம் = Galaxy
//பால்வெளி (Milky Way) என்றழைக்கப்படும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே, மற்றொரு சூரிய மண்டலத்தில் துணைக்கோள் ஒன்றை அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்//
இந்த வரியில் சூரிய மண்டலம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ,அண்டம் என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.தற்பொழுது இருக்கும் வரி குழப்பும் படியாக உள்ளது
//ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஒரு வருடம் முழுவதும் பயணம் செய்வதை குறிப்பிடுவது ஆகும்.
//
இது நீங்கள் சுட்டியிருந்த இணைய தளத்திலேயே இப்படித்தான் இருந்தது
"ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஒரு வருடம் முழுவதும் பயணம் செய்யும் 'தூரம்'" என்று குறிப்பிட்டிருந்திருக்கலாம்.
முதலில் "ஒளி" வேகம் அல்லது அதற்கு மேல் போகக்கூடிய ஊர்தி வேண்டும்..அப்படியே முடிந்தாலும் ஒருவனுடைய வாழ்நாளில் 65 வருடம் ரொம்ப ரொம்ப அதிகம்.
இந்த கண்டுபிடிப்பை வைத்து அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்?
தண்ணி லாரி கூட விடமுடியாது.:-))
I always have the feeling that Sujatha, Issac Asimov, Arthur C. clark would oneday become real! This I feel is a major step towards that!!
ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தோடு பேரண்டத்தில் எந்த ஒரு பொருளும் பயணம் செய்ய முடியாது என்று நம்பப்பட்டாலும்.
We never know.
ஏதாவது Wormholes போன்ற workarounds வருங்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.
சமீபத்தில் K-Pax என்று ஒரு படம் பார்த்தேன்,அதில் வரும் கதாபாத்திரம் தான் வேற்று கிரகத்தில் இருந்து ஒளியை விட பல மடங்கு வேகமாக பயணித்து வந்ததாக கூறுவார்.
எப்படி??
ஐன்ஸ்டீன் எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்துக்கு accelerate பண்ண முடியாது என்றுதான் சொன்னார் ஆனால் ஏற்கெனவே அதை விட வேகமாக பயணப்படும் பொருள்கள் கிடையாது என்று சொல்லவில்லை என்று வசனம் வரும்.
அதுவும் தவிர அவ்வளவு வேகமாக பயணம் செய்தால் நேரம் செல்வதே உங்களுக்கு சீக்கிரமாக தெரியும். உதாரணத்திற்கு நமக்கு இரண்டு வருடங்கள், ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு 6 மாதமாக கழியும். (very rough approx)
இப்படி பல விந்தைகளையும் புதிர்களையும் உள்ளடக்கியது இந்த விண்வெளி.
அதனால்!!
எதுவும் நடக்கலாம்!!! :-)
//அண்டம் என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.//
CVR,
என் புரிதல்படி, பல சூரிய மண்டலங்கள் சேர்ந்தது தான் இப்பேரண்டம் இல்லையா?!
ஆக, "(நம்)சூரிய மண்டலத்திற்கு வெளியே" என்பது எப்படி குழப்புகிறது என்பதை தெளிவுபடுத்த இயலுமா?
ஒளிவேகம் பற்றி இன்னும் தகவல்கள் அளித்திருக்கலாம், ஒத்துக்கொள்கிறேன்.
நல்ல தகவல் தான் ஆனால் இது போனவருடம் வந்த தகவல் அல்லவா? அப்போதே சொன்னர்கள் நீர் உள்ள கோள் என்று!
நம் சோலார் அமைப்பிலேயே 10வாது கோள் சேட்னா என்று கண்டுபிடித்தார்கள் போன ஆண்டு அதிலும் உறைந்த நிலையில் நீர் உள்ளதாம் ,அங்கே இருந்து குழாய் போட டெண்டர் விடுவதை பற்றி அரசியல்வாதிகள் ஆலோசிப்பதாக தகவல்:-))
ஒளி வேகத்தில் செல்லும் ஊர்தி கண்டுபிடிக்க சாத்தியம் குறைவாகத்தான் உள்ளது , அற்புதம் ஏதேனும் நிகழனும் அறிவியலில். ஐன்ஸ்டைன் தியரிப்படி டெலெபோர்டேஷன் என்ற முறைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள் அது சாத்தியம் ஆனாலும் விண்வெளிப்பயணம் எளிதாகும்.
வோர்ம் ஹோல் மூலமாக விண்வெளியில் குறுக்குவழியில் போகலாம் ஆனால் அதன் ஈர்ப்புவிசையை தான்டி செல்ல இஅயலுமா தெரியவில்லை?
@வாசகன்
//பால்வெளி (Milky Way) என்றழைக்கப்படும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே, மற்றொரு சூரிய மண்டலத்தில் துணைக்கோள் ஒன்றை...... //
பால்வெளி(Milky Way) என்பது நமது அண்டம் (Galaxy), சூரிய குடும்பம் (Solar system) அல்ல .
நான் படிக்கும் போது
"outside our solarsystem called milky way" என்று பொருள் பட்டது.
but it should be
"outside our galaxy,called the milky way"
BTW,is this thing outside our solar system?? or the galaxy??
if its outside our solarsystem (which i think is the case) your sentence //பால்வெளி (Milky Way) என்றழைக்கப்படும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே,// is incorrect.
Post a Comment