.

Thursday, July 12, 2007

கலாமுக்கு இங்கிலாந்தின் உயர் விருது

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இங்கிலாந்தின் மிக உயர்ந்த "இரண்டாவது சார்லஸ் அரசர் விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆக்கப்பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவுக்கு அடுத்த படியாக இந்த விருதைப் பெறும் ஒரு நாட்டின் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார் கலாம். இங்கிலாந்து அரச பரம்பரைத் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறுகையில், வளரும் நாடான இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு தொலைநோக்குத் திட்டம் தீட்டியவர் கலாம் என்று புகழாரம் சூட்டினார்.

வரும் வெள்ளிக்கிழமை தில்லி மற்றும் லண்டனில் நடைபெறுவதாக இருந்த விருது விழா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவையடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின், விருது வழங்குவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி

The Hindu News :: Kalam chosen for King Charles II Medal

3 comments:

ஜீவி said...

மேதகு கலாம் அவர்களைப்பற்றி 'இரண்டாம் குரலில்' சிலர்
பேசத்துவங்கியிருக்கும் இந்த நேரத்து ஏற்பட்ட மனப்புண்ணுக்கு
இந்த செய்தி மருந்தாக இருந்தது.

G.Ragavan said...

கலாமுக்கு எனது வாழ்த்துகள்.

Sridhar Narayanan said...

நல்ல செய்தி. கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...