இலங்கையின் கிழக்கேயுள்ள தொப்பிகலப் பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது இராணுவ ரீதியாக முக்கியமானது என பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார். சம்பூர் வாகரை போன்ற பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தொப்பிகலப் பகுதிக்கு வந்த பின்னர் அவர்களை அங்கிருந்தும் இராணுவம் வெளியேற்றியது இலங்கை அரசைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றிதான் எனவும் அவர் கூறுகிறார்.
ஆனாலும், கைப்பற்றிய பிரதேசங்களை அரசாங்கம் எவ்வளவு காலம் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது இனி வரும் வாரங்கள் அல்லது மாதங்களில்தான் தெரியவரும் எனவும் இக்பால் அத்தாஸ் தெரிவிக்கிறார். 13 வருடங்களுக்கு முன்னரும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது எனவும் அப்போது கிழக்குப் பகுதி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என அரசு தெரிவித்த போதிலும், சிறு சிறு தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகள் தற்போதிருந்த நிலைக்கு கொண்டுவந்தனர் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசியல் ரீதியான வெற்றியாக இதைக் காண்பிப்பதற்காகத்தான் இந்தத் இராணுவத் தாக்குதல்கள் இவ்வளவு வேகமாக நடத்தப்பட்டன எனவும் இக்பால் அத்தாஸ் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனாலும் எதிர்பார்த்த அரசியல் பலனை இது தருமா என்பதற்கு அடுத்த சில வாரங்களில் தெரியவரும் எனவும், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழக்கும் வரை இது போன்ற இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் எனக் காட்டுவதாகத்தான் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்
கிழக்கைப் போன்றே இலங்கையின் வடக்கிலும் இராணுவம் இது போன்ற தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தாம் கருதுவதாக இக்பால் அத்தாஸ் தெரிவிக்கிறார். இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகமாகும்போது விடுதலைப் புலிகள் பின்வாங்குவதும், பின்னர் தாக்குதல்களை நடத்துவதும் கடந்த 25 வருடமாக நடைபெற்று வரும் யுத்தத்திலிருந்து தெரிய வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்ற நிலையை விடுதலைப் புலிகள் எடுப்பார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க எவ்வாறு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட போது எவ்வாறு ஒரு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவைத் தேடிக் கொண்டாரோ, அதே போலவே தற்போது கிழக்கில் தொப்பிகலவை பிடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தேடிக் கொள்கிறார் என இலங்கை பகுப்பாய்வாளர் டி பி எஸ். ஜெயராஜ் கூறுகிறார்.
கிழக்கில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அந்த மக்களின் இதயங்களை வென்றெடுக்காமல் இவ்வாறான வெற்றிக் கொண்டாட்டங்கள் பொருத்தமானதாக இருக்காது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
- BBC Tamil
BBC NEWS | South Asia | 'War victory party' in Sri Lanka: "'You can win a battle with 2,000 troops, but to hold it you need 10,000 minimum'"
NDTV.com: LTTE warns of retaliation
Thursday, July 12, 2007
அரசியல் ரீதியான வெற்றியாகத்தான் தொப்பிகலவை கைப்பற்றியது பார்க்கப்படுகிறது என்கிறார் இக்பால் அத்தாஸ்
Labels:
ஈழம் - இலங்கை
Posted by Boston Bala at 11:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment