2 பேர் பலி- 11 பேர் படுகாயம்.
இலங்கை அரசு- விடுதலைப்புலி இடையே மீண்டும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நார்வே நாட்டு தூதர் முல்லை தீவு சென்று விடுதலைப்புலிகளுடன் பேசி விட்டு வந்தார். அவர் கொழும்பு திரும்பிய சில மணி நேரத்தில் தமிழர் பகுதியில் சிங்கள ராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. முல்லைத்தீவு அருகே உள்ள அனம்பில் பகுதியில் சிங்கள ராணுவத்தின் கிபீர் ரக விமா னங்கள் பறந்து வந்து குண்டுகளை வீசின. அங்கிருந்த கிறிஸ்தவ ஆலயம், மீன் சந்தை தாக்கப்பட்டன. இதில் பள்ளி மாணவர் செல்வா (வயது 15), பாலசுப்பிரமணியம் (51) ஆகியோர் உயிர் இழந்தனர். கலையரசு (4), அருள்சன் (1) ஆகிய குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பகுதி சுனாமியின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தன. குண்டு வீச்சால் இந்த வீடுகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே விடுதலைப்புலிகளிடம் 17 ஆண்டு களுக்கு மேலாக இருந்த தோப்பிகலா முகாமை ராணுவம் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
Thursday, July 12, 2007
இலங்கை தமிழர் பகுதியில் குண்டு வீச்சு.
Labels:
இலங்கை,
ஈழம் - இலங்கை
Posted by Adirai Media at 12:15 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment