.

Thursday, July 12, 2007

'இட்லி'க்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

மதுரை முருகன் இட்லி கடையில் இட்லிக்கு வழங்கப் பட்ட சட்னி, சாம்பார் சரியில்லை என வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றிய தினமலர் செய்தி:

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நல்லபெருமாள். இவர், முருகன் இட்லி கடை உரிமையாளர் மனோகரனுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்,"29.9.2006ல் முருகன் இட்லி கடைக்கு சாப்பிட சென்றேன்; 6 இட்லி சாப்பிட்டேன்; ஒரு இட்லி ரூ.4 என தெரிவிக்கப்பட்டது; இதற்காக வழங்கப்பட்ட சட்னி, சாம்பார், பொடி ருசியாக இல்லை. இதுகுறித்து கடை மேலாளரிடம் தெரிவித்த போது சரியான பதில் சொல்ல மறுத்து விட்டார். ஆனால், 6 இட்லிக்கு ரூ.37.40 வாங்கிக் கொண்டனர். இதற்காக பில் கேட்ட போது தர மறுத்து விட்டனர். எனவே, இந்த சேவைக்குறைவுக்காக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்' என குற்றம் சாட்டினார்.

முருகன் இட்லி கடை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " சட்னி, சாம்பார் ருசி இல்லை என்ற குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை. உரிமையாளரை மிரட்டும் நோக்கத்தில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. கடை சார்பில் வக்கீல் பிறவிபெருமாள் ஆஜரானார்.குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை நீதிபதி பரமேஸ்வரன் தள்ளுபடி செய்தார். வழக்கை தொடர்ந்தவர் 2 மாதங்களுக்குள் ரூ.2 ஆயிரம் அபராதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

6 comments:

Boston Bala said...

ருசியில்லாதபோதே ஆறு இட்லி! இன்னும் சாம்பார் எல்லாம் டேஸ்ட்டாக இருந்திருந்தால்...

Anonymous said...

என் ஆத்துகாரருக்கு மதுரை முருகன் இட்லி ரொம்ப பிடிக்கும்

சிறில் அலெக்ஸ் said...

//வழக்கை தொடர்ந்தவர் 2 மாதங்களுக்குள் ரூ.2 ஆயிரம் அபராதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.//

என்ன கொடுமை சரவணன் இது?

:)

Anonymous said...

//என்ன கொடுமை சரவணன் இது?

:) //

நுகர்வோர் வழக்குகளில் நுகராதவருக்காக, மன்னிக்கவும் பிரதிவாதிக்கு ஆதரவாக நான் பார்த்த முதல் தீர்ப்பு இது.

எதுக்கெடுத்தாலும் 'நுகர்வோர் கோர்ட்-ல பார்த்துக்கறேன்' னு பம்முறத கொறக்கிறதுக்கு இது ஒதவும்ல.

சிறில் அலெக்ஸ் said...

சாம்பார்ல 'மணம்' இல்லைண்ணா 'முகர்வோர்' கோர்ட்டுக்குப் போகாம நுகர்வோர் கோர்ட்டுக்கு எப்டிப் போனாரு இவரு?

:)

வவ்வால் said...

பாலா ,

முதலில் 2 இட்லி தான் சாப்பிட்டார் , அப்புறமாவது வாசனையோடு நல்ல சாம்பார் ஊற்றுவார்களா என மேலும் டெஸ்ட் செய்து பார்க்க ஆறு இட்லி சாப்பிட்டாராம். அட என்ன சார் அமெரிக்காவில் காபி சூடு அதிகமா இருக்குனுலாம் கேஸ் போடுறாங்க!
-------------------

சிரில்,

நுகர்தல் = வாசனைப்பிடித்தல் தான் , நல்ல வேலை டென்னிஸ் கோர்டுக்கு போக சொல்லவில்லை நீங்கள்!

-o❢o-

b r e a k i n g   n e w s...