.

Thursday, July 12, 2007

ஈயடித்தால் வருமானம்.

எந்த வணிகமும் போணியாகாத போது 'ஈயடிக்கிறது' என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது 'ஈயடித்தாலே' வருமானம் என்று நிலமை ஆகியுள்ளது. இது எந்த நாட்டில் தெரியுமா: 'சீனா'வில் தான்.

இதுபற்றி இந்தச்செய்தியில்,

சீன நாட்டில் லுயாங் மாகாணத்தில் உள்ளது சிகாங் நகரம். இங்கு ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஈக்களை ஒழிக்க சிகாங் நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றுப்புற துõய்மையை ஊக்கப்படுத்தும் வகையில் ஈக்களை கொல்வதற்கு பரிசு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.""நகரை துõய்மைப்படுத்தும் நடவடிக்கையில் மக்களை ஈடுபடுத்த இது தான் சிறந்த வழி என்று நானும் எனது சக அதிகாரிகளும் நம்புகிறோம்,'' என்று லுயாங் நகர தலைமை அதிகாரி ஹூ குய்செங்க் கூறினார்.மொத்தம் 10 லட்சத்து 55 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லுயாங் நகர், மாகாண அளவில் மிகத்தூய்மையான நகர் என்ற பெயரை எடுப்பதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதற்காக, ஒரு ஈயை கொன்றால் 30 பைசா பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுவரை இரண்டாயிரம் ஈக்கள் கொல்லப்பட்டு இதற்காக நகர நிர்வாகம் ஐந்தாயிரத்து 250 ரூபாய் செலவழித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையப்பயனாளி ஒருவர் கூறுகையில்,"நகரை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நகர நிர்வாகத்தின் நோக்கம் சரியானது தான். ஆனால், இது மக்களை கேலிக்குரியதாக்கும் செயல். கொல்லப்பட்ட ஈக்களுக்கு பைசா கொடுப்பதை விட நகர மக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடவேண்டும்; அதன் மூலம் ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்தலாம்'' என்றார்.

எலி,கொசு, பூச்சிகள் ஆகியவற்றை கொல்வதில் வித்தியாசமான வழிகளை சீன நாடு பின்பற்றிய சரித்திரம் உண்டு.

கடந்த 1950ம் ஆண்டு மா சேதுங் ஆட்சியின் போது ஈ, கொசு, எலிகள் மற்றும் சிட்டுக் குருவிகள் ஆகியவற்றை கொல்ல பொதுமக்களுக்கு அவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...