.

Tuesday, August 7, 2007

சாலமன் பாப்பையாவை கண்டித்து துண்டுப் பிரசுரம்

விழுப்புரத்தில் கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு தலைமை வகிக்க சாலமன் பாப்பையா வந்தார். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர் ஜோதி நரசிம்மன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

சிவாஜி திரைப்படத்தில் நடித்த சாலமன் பாப்பையா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரை அவமதிக்கும் வகையில் வசனம் பேசியதாகவும், இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து தமிழ் ஆர்வலர்கள் ஜோதி நரசிம்மன், கோ.பாபு, கோ.கணேசன், ஆனந்தன் உள்ளிட்ட 8 பேரை சப் இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்தார்.

தினமணி

19 comments:

குமரன் (Kumaran) said...

வழிமொழிகிறேன்.

சாலமன் பாப்பையா போன்றவர்களே தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.

kiddy ppl said...

சாலமன் பாப்பையா போன்ற தமிழ் அறிஞர்கள் தமிழ் சமூதாயத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். சினிமாவில் வேஷம் கட்டுவதென்றால் அறிஞர்கள் கூட கூத்தாடிக் கூட்டத்துடன் கும்மாளம் போடுகிறார்கள். தமிழர்களை அவமானப்படுத்தும் எந்த நிகழ்ச்சிகளும் வன்மையாக கண்டிக்கப்படத்தக்கவை.

மாசிலா said...

சாலமன் பாப்பையாவை நடுத்தெருவில் நிற்கவைத்து சவுக்கடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு விழிப்புணர்வு வரும்.

எத்தனை குடும்பங்களில் இது போன்ற கரு நிற இளம் பெண்கள் இக்காட்சிகளை பார்த்து மனம் வெம்பி இருப்பார்கள்? இவர்களை கரை சேர்க்க முடியாமல் பரிதவிக்கும் பெற்றோர்கள் மனம் எந்த அளவிற்கு புண் பட்டிருந்திருக்கும்? திரை அரங்கில் படத்தை பார்த்து முடித்து வெளியே வரும்போது எந்த அளவிற்கு இவர்களின் மனம் சலனம் அடைந்திருப்பார்கள்?

இதையெல்லாம் நினைத்து பார்க்கும்போது மனம் மிகவும் வேதனை படுகிறது.

கால் ஊனமான ஒருவரை பார்த்து 'நீ ஒரு நொண்டி' என்பதற்கும், பார்வை அற்ற ஒருவரை 'நீ ஒரு நொல்லை கண்ணில்லா கபோதி' என்பதற்கும் இவர் செய்ய ஒத்துக்கொண்ட இச்செயலுக்கு எந்த வித மாற்றமும் இல்லை.

பெண்களை விட்டு அவர்கள் கையாலேயே விலக்குமாற்றினால் நன்றாக சாத்தினாலும் தகும்.

சாலமன் பாப்பையாவின் மன்னிக்க முடியாத இக்குற்றத்திற்கு நான் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிற அடிப்படையில் ஒரு வர்க்கத்தினரை கேலிக்குண்டாக்குவதை தனிக்கை அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்பது பெரிய விந்தையாகவே உள்ளது.

மாசிலா said...

தமிழச்சி : //சாலமன் பாப்பையா போன்ற தமிழ் அறிஞர்கள்...//

என்னது இவர் ஒரு தமிழறிஞரா?
அது கெட்டுது போங்க!

பாவம் தமிழறிஞர்கள் உலகம்!
:-(

Anonymous said...

சினிமாவில் பேசியது தவறுதான். வசனம் எழுதியவர்களும் டைரக்டரும் செய்த தவறு. இதுவரை கள‌ங்கமற்ற பொதுவாழ்வில் இருந்த ஒரு மனிதரை தரக்குரைவாக விமர்சிப்பது வேதனை தருகின்றது.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

/*அடிப்படையில் ஒரு வர்க்கத்தினரை கேலிக்குண்டாக்குவதை தனிக்கை அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்பது பெரிய விந்தையாகவே உள்ளது*/

தணிக்கை அதிகாரிகளைப்பற்றி இன்னும் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ள உங்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்களையும் குறை சொல்ல முடியாது. இது ரஜினி படமாச்சே ரசிகர்களின் கோபத்துக்காளாகக் கூடாதென்றோ அல்லது ரஜினி தமது வேலைக்கே அழிவுவைக்க கூடும் எனவோ அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.
மேலும் நம்ம "மஞ்சள் துண்டு" நாயகனே நல்ல படம் என்ற பின் நமக்கேன் வம்பு எனவும் நினைத்திருக்கலாம்!

kiddy ppl said...

//என்னது இவர் ஒரு தமிழறிஞரா?
அது கெட்டுது போங்க! //

தோழர் மாசிலா,
ஒர் சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு சாலமன் பாப்பையா அவர்களை அவமதிப்பு செய்வது தவறானது. அவர் செய்த தவறை சுட்டிக்காட்டுவது நமது கடமையே தவிர சந்தடி சாக்கில் அவதூறுகளை அள்ளிவீசுவதற்கு நாம் என்ன அரசியல்வாதிகளா?

மாசிலா said...

தமிழச்சி //சந்தடி சாக்கில் அவதூறுகளை அள்ளிவீசுவதற்கு நாம் என்ன அரசியல்வாதிகளா? //

இவரு தமிழறிஞரா இருந்தா எனக்கு என்ன? அல்லது சமஸ்கிருத அறிஞரா இருந்தால்தான் எனக்கு என்ன?

நான் அவரை படத்தில் பார்த்தது ஒரு சாதாரண நடிகராகவே. அவ்வளவுதான்.

எங்களது குடும்பத்திலேயே சொந்த தங்கை ஒருவர் இந்த வித ஈனத்தன நிறவெறி பொது மனப்பான்மையின் பாழும் வலையில் சிக்குண்டு இன்றும் மணம் ஆகாமல் இருக்கிறார் என்பது உமக்கு தெரியாது தோழி தமிழச்சி. எனது தகப்பனார் பட்ட துன்பங்களை நினைத்து பார்த்தேலே மனம் வேதனை அடைகிறது.

மேலும் இவர் ஒரு தமிழறிஞர் என்பது எனக்கு எள்ளளவும் தெரியாது. இந்த முறையில் அதை அறிந்துகொண்டது அதைவிட வெட்கம்.

Thamizhan said...

அவர் தமிழாசிரியராக இருந்து நல்ல மரியாதையுடன் இருந்தது உண்மை.ஆனால் பட்டி மன்றங்கள்,வெட்டி மன்றங்களாகி பண்த்திற்காகத் தமிழை விற்று வந்தார்.
அதைவிட இவர் பார்ப்பனர் ஆதரவிற்காக தமிழ்நாடு பார்ப்பனர் மாநாட்டிற்குச் சென்று பேசிய பார்ப்பனத் தமிழர்தான்.
மரியாதையை அவர்களாகவே இழ்க்கும் போது தமிழ் எப்படிக் காப்பாற்றும்?

TBCD said...

//*பெண்களை விட்டு அவர்கள் கையாலேயே விலக்குமாற்றினால் நன்றாக சாத்தினாலும் தகும். *//

இதை.நான் வன்மையாக் கன்டிக்கிறேன்.......

விளக்கமாறு என்பதே சரியான வார்த்தை.....ஹி!ஹி!

அவரு இப்போ நொந்து போயிருப்பாரு... பொது வாழ்கையில இருக்கிறவங்க...என்ன செஞ்சாலும் அதை சீர் தூக்கி பார்த்து தான் செய்யனும்...அதை அனுபவபூர்வமா உனர்ந்து இருப்பார்...

அவர அந்த படத்துக்கு ஏன் போட்டாங்க எனக்கு இன்னும் புரியல..அவருக்குமே புரிஞ்சி இருக்காது... வசனம் எழுதுறான் பாருங்க அவனுக்கு சமுக பொறுப்பும் வேனும்.... எல்லா எனக்கு படிக்க சொல்லி அலுத்துக்குவாரு அந்த மகா வித்துவான்... அய்யா...மக்கள் என்னத்தையும் கொஞ்சம் படிங்க...இதெல்லாம்..ஒரு மின்னஞ்சல போட்டு, பத்திரிக்கைக்கு ஒரு காப்பி, அவருக்கு ஒரு காப்பி அனுப்பினா பதில் சொல்லுவாரா..இத்தன் சங்கம் இருக்கே..ஏதாவது ஒரு சங்கம் இத செய்யலாமே... கைஎழுத்து போட் நான் ரெடி

அஜித் படத்திற்கு முடிவை..மாற்றுவது போல, இத மாத்த சொல்லி ஏன் ஒரு பெட்டிசன் போடக்கூடாது...(இது அவங்க கருத்து சுதந்திரத்தை பாதிக்குமா..யாரவது விளக்குங்கப்பா...)

Unknown said...

பாப்பையாவுக்கு ஏன் இந்தமாதிரி நடிக்க எண்ணம் வந்தது?

பாமரனின் வார்த்தைகள் ஞாபகம் வருகிறது....
கறுப்பு ஒரு நிறம் அல்ல அழிப்பதற்கு.. ஒரு இனம்!

பரத் said...

இந்த தவறுக்கு சாலமன் பாப்பையா மட்டுமே முழுக்காரணம் இல்லையென்றாலும் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.அல்லது விலகிக்கொண்டிருக்கலாம்.பணத்தாசையும் சினிமா ஆசையும் யாரை விட்டது

Anonymous said...

//அவர அந்த படத்துக்கு ஏன் போட்டாங்க எனக்கு இன்னும் புரியல..அவருக்குமே புரிஞ்சி இருக்காது...//

அந்த வசனத்துக்காக இருக்குமோ?

kiddy ppl said...

//இவரு தமிழறிஞரா இருந்தா எனக்கு என்ன? அல்லது சமஸ்கிருத அறிஞரா இருந்தால்தான் எனக்கு என்ன?

நான் அவரை படத்தில் பார்த்தது ஒரு சாதாரண நடிகராகவே. அவ்வளவு தான். //

தோழர் மாசிலா,
எனக்கு பிடிக்காதவைகளில் சினிமாவும் ஒன்று.சிவாஜி படத்தை நான் பார்க்கவில்லை.படத்தில் காட்சிகள் எப்படி அமைக்கப்பட்டிருந்தது என்று தெரியாவிட்டாலும் ஒரு பார்ப்பானின் வசனத்தில் தமிழன் எப்படி வர்ணிகப் பட்டிருப்பான் என்பதை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது?

தவறுகளில் இருந்து திருத்திக் கொள்பவன் தான் மனிதன்.சாலமன் பாப்பையா நீங்கள் நினைக்கும் அளவுக்கு மோசமானவரில்லை சமூதாயம் சுட்டிக்காட்டுவதை வைத்து தவறை அவர் உணர்ந்திருக்கலாம். அவரிடமிருந்து இனி வரவேண்டியது மன்னிப்பு என்ற வார்த்தை மட்டுமே! அதற்குள் இவ்வளவு ஆக்ரோஷம், அடாவடியான வார்த்தைகள் எதற்கு தோழா?

Anonymous said...

I appreciate Masila's comments on this. this bugers(Solomans) are alive in the name of Tamil. that is why they are going bottom level (they are having Fame maia). he is pattimanra vibacharan. First of all we must thank our Friend Mr. Pamaran. because he stongly condomned in the Kumudam after that only they (Tamil peoples, I dont know where were they after released the film) are giving condomnes. Ferozkhan

Anonymous said...

//அவர அந்த படத்துக்கு ஏன் போட்டாங்க எனக்கு இன்னும் புரியல..அவருக்குமே புரிஞ்சி இருக்காது... //

இது ஒருவேளை பார்ப்பண சதியாக இருக்குமோ!.

ஒன்னுமே புரியலேயா! இப்படி நம்பவைச்சு கழுத்தறுத்திட்டாங்கலேயா!

என்று அறிஞர் இப்போ புலம்புகிறாராம்.

சாலமன் பாப்பையாவைப்பற்றி நன்கு அறிந்தவன் என்கிற முறையில், அவர் அறிஞரே இல்லையென்று என்னால் சொல்லமுடியும். அவர் எழுதியதாக வந்த பலவும் அவரிடம் முனைவர் பட்டம் பெற உதவி தேடி வந்த மாணவர்களிடம் இருந்து களவாடப்பட்டது என்பது தான் உண்மை.

Anonymous said...

This is not the first time there is a comedy scene insulting dark girls! Why there was no protest when the same was done in so many Goundamani/Senthil movies? Because script writer was a Thamizhan?

Anonymous said...

/Why there was no protest when the same was done in so many Goundamani/Senthil movies? Because script writer was a Thamizhan?/

Goundamani/Senthil are not responsible Scholars such as Soloman Paappaiya.

Anonymous said...

///Why there was no protest when the same was done in so many Goundamani/Senthil movies? Because script writer was a Thamizhan?/

Goundamani/Senthil are not responsible Scholars such as Soloman Paappaiya.

//

No. That is not the real reason. Their dialogues are not written by a paappaan. That is the real reason. Now that it is written by paappaan everyone gets a chance for dharuma adi.

-o❢o-

b r e a k i n g   n e w s...