.

Tuesday, August 7, 2007

சாலை விபத்தில் மூன்று 'கன்வாரியா'க்கள் மரணம்: கலவரம்

சிராவண மாதத்தில் ( நமது ஆவணி) வட இந்தியாவில் தோளின் மீது ஒரு கம்பில் இருமுனைகளிலும் 'கன்வார்' எனப்படும் நீர்கலசங்களைக் கட்டி கால்நடையாக சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பல சாலைகளிலும் நடந்தாலும் தில்லி- ஹரித்வார் சாலை இதற்கு பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சாலையையே அடைத்துப் போவது நமது தைப்பூசத்திற்கு மதுரையிலிருந்து பழனி செல்லும் பக்தர்கள் கூட்டம் போலிருக்கும். கன்வார் எடுத்துச் செல்லும் இவர்களை கன்வாரியாக்கள் என்றழைப்பர்.

செவ்வாயன்று குட்கான்வ் அருகே இக்கூட்டத்தினர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த டிரக் ஒன்று மோதி மூன்று கன்வாரிகள் இறந்தனர்;பலர் படுகாயமடைந்தனர். காலை 8 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கன்வாரியாக்கள் சாலையை வழிமறித்து தில்லி- ஜெய்பூர் சாலையில் வண்டிகளை கொளுத்தி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை 8 இல் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. துணை காவல் ஆணையரின் வண்டியையும் காவல்நிலைய வண்டியையும் தீயிட்டு கொளுத்தினர்.
இறந்தவர்களுக்கு நட்டைஇடு வழங்கும்வரை போராட்டத்தைத் தொடருவோம் எனவும் இனி இத்தைகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் அரசு உறுதி தர வேண்டும் எனவும் கன்வாரியா ஒருவர் கூறினார்.

Accident Kills Three 'kanwarias', Pilgrims Turn Violent

1 comment:

Boston Bala said...

நெடுஞ்சாலைகளில் 'ஷோல்டர்' எனப்படும் பக்கப்பாதைகளில் மட்டும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள், மாட்டு வண்டிகள் பயன்படுத்த வேண்டும் என்று விதி வகுக்கலாம்

-o❢o-

b r e a k i n g   n e w s...