.

Tuesday, August 7, 2007

ஜெயேந்திரர் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜி.பி. மாத்தூர் மற்றும் பி.கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியம், தான் ஜெயேந்திரரின் பக்தன் என்பதால் இந்த வழக்கை விசாரிக்கப்போவதில்லை என்றார்.மேலும் ஜெயேந்திரர் மனு மீது புதிய பெஞ்ச் விசாரணை நடத்தும் என்ரும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து ஜெயேந்திரரின் மனு மீதான விசாரணை மூன்று வாரத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான வழக்கு காஞ்சீபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயேந்திரரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயேந்திரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MSN Tamil
தமிழக வக்கீல் வாதாட தடை : சங்கராச்சாரியார் வழக்கு 3 வாரத்துக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

2 comments:

Anonymous said...

நேர்மையான நீதிபதி. பாராட்டுக்கள்.

புள்ளிராஜா

kiddy ppl said...

தமிழ் மக்களே!

பார்த்தீர்களா? அரசியல் சட்டத்தை மதிக்கத் தெரியாத நீதிபதி இத்தனை வருடங்களாக எந்த "ரேஞ்ஜில்" நீதி சொல்லி இருப்பார்?

பார்ப்பான் புத்தியை காட்டிவிட்டார். இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் சமூதாயத்திற்கு எச்சரிக்கை செய்யும் அபாய மணி!!!!

தமிழ் சமூதாயமே சினிமா போதையில் இருந்து தெளிந்து சமூதாய நிகழ்சவுகளை காணுங்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...