.

Friday, August 31, 2007

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார்


சென்னை : நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று சென்னையில் உதயமானது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று புதிய கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்சியின் கொடியை இன்று சரத்குமார் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார். நடிகர் சரத்குமார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அவைத் தலைவராக முருகன், துணைத்தலைவராக எர்ணாவூர் நாராயணன், பொருளாளராக கரு.நாகராஜன், துணை பொதுச் செயலர்களாக ஏ.எல்.சுந்தரேசன், சீனியம்மாள், ரவீந்திரன் துரைசாமி, கொள்கை பரப்பு செயலராக மருது.அழகுராஜ், தலைமை நிலைய செயலராக ஜெயபிரகாஷ், நிதிநிலைச் செயலராக ரகுபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நன்றி: தினமலர்

10 comments:

சிவபாலன் said...

கொடி நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல டிசைன்.. மறக்காமல் நட்சத்திரத்தை போட்டிருக்கிறார்கள்..ம்ம்ம்..

Boston Bala said...

கொடியின் படத்தை சேர்த்து விடுங்களேன்...

கட்சி பெயரில் திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லையே?

Anonymous said...

கொடியின் படம் பார்க்க இங்கே போகவும்

http://dinamalar.com/dinaadmin/PagePhoto/fpn04.jpg

சிவபாலன் said...

படம் உதவி: மிள்காய்

நன்றி!

http://milakaai.blogspot.com/2007/08/blog-post_31.html

சிவபாலன் said...

பாபா

போட்டாச்சு போட்டாச்சு.. Ha Ha Ha...


// கட்சி பெயரில் திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லையே? //

அதானே.. தமிழ் நாட்டில் ஜெயிக்கனுமின்னு என்கிற எண்ணமே இல்லையா? இல்லை ஒரு வேளை அது மக்களுக்கு போர் அடித்துவிட்டதென்று மாற்றிவிட்டாரா?

எது எப்படியோ....சட்டசபையில் நிறைய நட்சந்திரங்கள் மின்னும்.. இன்னும் உள்ளே வர நிறைய பேர் காத்துகிடக்காங்க..

வென் திரையில் தலைவனைத் தேடும் தமிழன் வாழ்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உழைத்த காசை அழிக்கவும், வழி வேண்டும் தானே!!!!

சிவபாலன் said...

உங்கள் கட்சி கொடியின் விளக்கம் என்ன? கட்சிக் கொடியில் உள்ள சிகப்பு நிறம் உழைப்பையும், புரட்சி எண்ணத்தையும் தருகிறது. மஞ்சள் நிறம் மங்களத்தையும், சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்பதை குறிக்கிறது. நட்சத்திரம் நாட்டு மக்களுக்கு தேவையான தொலை நோக்கு பார்வையை கொடுக்கிறது.

சிவபாலன் said...

// நட்சத்திரம் நாட்டு மக்களுக்கு தேவையான தொலை நோக்கு பார்வையை கொடுக்கிறது //

Ha Ha Ha..

சரத்குமாரின் நகைசுவைக்கு ஒரு அள்வே இல்லையா?..சினிமாவில் தான் இப்படி என்றால்..பொதுவாழ்க்கையிலுமா? Ha Ha Ha..

சுதாகர் R said...

// சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்பதை குறிக்கிறது //

அதுக்கு இவங்க என்ன பண்ணப் போறாங்க ???

asuran said...

கட்சியின் காசுமீர் கிளையின் நிர்வாகிகள் தேர்வு பற்றிய செய்திகளையும் விரைவில் எதிர்பாருங்கள்... அகில இந்திய கட்சியாயிற்றே... சும்மாவா?

-o❢o-

b r e a k i n g   n e w s...