.

Tuesday, August 21, 2007

கருத்தடை மாத்திரை விளம்பரம் - ஆனந்த விகடனுக்கு நோட்டிஸ்

சிப்லா (CIPLA) நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-பில் (I-PILL) எனும் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையை விளம்பரம் செய்ததற்காக ஆனந்த விகடன் வார இதழக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநனரகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

8 comments:

சிவபாலன் said...

பெண்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், சமுதாயப் பொறுப்பு என்ற அடிப்படையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

நல்ல விவாதம்.. தமிழ் மண விவாத தளத்தில் இதை போடுங்கப்பா!.. படிக்கலாம் ஒவ்வொருவருடைய கருத்தையும்..

Boston Bala said...

குமுதத்திலும் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

இந்த மாத்திரை உட்கொள்வதினால், சிசுக் கொலை அரங்கேறுவதாக அமெரிக்காவில் கண்டனம் எழுந்தாலும் FDA ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

---Director Of Drugs Control, N Selvaraju, "The advertising of this drug will mean that women will think 'I can do anything and there's an easy way not to get pregnant'. We can't allow such an attitude---

:)))

அமெரிக்கர்களுடன் உரையாடும்போது, இந்த மாதிரி மாத்திரை இந்தியாவில் வந்திருந்தால், பிரச்சினையே வந்திருக்காது என்று சொல்லிக் கொண்டு இருந்தேன். இந்த மாதிரி காவலர்களை சிந்திக்கவே இல்லை

சிவபாலன் said...

// இந்த மாதிரி காவலர்களை
சிந்திக்கவே இல்லை //

This is BABA touch! Ha Ha Ha..

G.Ragavan said...

கருத்தடை மாத்திரைகள் ஏற்கனவே இந்தியாவில் உண்டே. அரசு மருத்துவமனைகளில் கொடுப்பார்களே. மாலா-டி என்று ஒன்று ஏற்கனவே இருக்கிறதே. அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? விற்கக் கூடாதாக்கும். அரசாங்கமே விநியோகித்தால் போதுமாமா?

Boston Bala said...

ஜிரா...

அவை 'கருத்தடை' மாத்திரைகள். இது 'கருக்கலைப்பு' மாத்திரை என்பதாக இருக்கலாம்.

கடவுளின் வரப்பிரசாதத்தை மனிதன் எவ்வாறு அழிக்கலாம் என்பது இந்த மருந்தை (அமெரிக்காவில்) எதிர்ப்பவர்களின் வாதம்.

பொன்ஸ்~~Poorna said...

இந்த விளம்பரத்துக்கு எல்லாம் வழக்காமா?! அப்புறம் மூட்ஸ், கோஹினூர் விளம்பரங்களுக்கு ஏன் வழக்கு போடலையாம்?

Anonymous said...

The T.V advertisement for this pill was quite interesting to watch. It should have taken quite an effort to show this in Indian mass media.

Opinions on the pills apart, advertisement creativity is charming. No child watching TV can figure out whats happening in the advertisement. Sensibly done. I was surprised when they showed I-pill in the end!

Anonymous said...

RajTV also shown this ad, did the govt sent notice to them too?

-o❢o-

b r e a k i n g   n e w s...