.

Friday, August 31, 2007

அதிகாரமிக்க முதல் பத்து பெண்களில் சோனியா

பிரபல வணிக இதழ் ஃபோர்பஸ் வெளியிடும் உலகின் நூறு அதிகாரமிக்க பெண்கள் வரிசையில் ஐந்தாவதாக இந்திய அமெரிக்கரும் பெப்சி நிறுவன தலைவர்மற்றும் முதல் நிர்வாகியுமான இந்திரா நூயி இடம்பெற்றிருக்கிறார். இவரை அடுத்து ஆறாவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி இடம் பெற்றுள்ளார்.

ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள அஞ்செலா மெர்க்கில் இரண்டாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சீன துணை பிரதமர் உ யி யும் சிங்கப்பூரின் டெமெஸ்க் நிறுவன முதல் நிர்வாகி ஹோ சிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டெலெஸ்சா ரைஸ் நான்காம் இடத்தில் உள்ளார்.

சோனியா காந்தியைப் பற்றி இவ்விதழ் இத்தாலியில் பிறந்த இந்தியாவின் மிகுந்த அதிகாரமிக்க இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தான் அரசியலில் 1990இல் இறங்கியபின்னர் வெகுதூரம் வந்துள்ளார் எனக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு இவரது பங்கை சிறப்பாக கருதுகிறது.

முழு கட்டுரைக்கு Sonia Gandhi, Indra Nooyi among world's 10 most powerful women-Politics/Nation-News-The Economic Times

4 comments:

மாசிலா said...

ஒன்னு உள்ளூருல இருந்து அமெரிக்க போய் உலக நலத்தை கெடுக்குற பானத்த உருவாக்க உலக பிஸ்தாவுக்கு குப்ப கொட்டுது, இன்னொன்னு வெளியில இருந்து உள்ள வந்து பஜன பாடுது.

பல ஆயிரம் காலமா மண்ணுல வாழற பூர்வீக மக்களுக்கு யாருக்குமே இல்லாத அறிவு இந்த பவுசுக்கு மட்டும் கெடைச்சுது ஆச்சரியமாத்தான் இருக்குது.

இதே ஒரு கருப்பின பொண்ணா, இந்த அளவுக்கு ஒசர உட்டிருப்பாங்களா வட நாட்டுக்காரங்க?

வெள்ள தோல கண்டாலே நம்ம இந்திய குஞ்சுகளுக்கு ஒரே கிர்ருதான் போங்க!

என்ன எழவோ!

Boston Bala said...

உலக அளவில் தலை பத்தில் இரு இந்தியர் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்!

Anonymous said...

Both are not INDIANS.
one is MADE IN ITALY.( WHITE SKIN can get good job in India)
Second is : EXPORTED INDIAN. She has USA PASSPORT.

மாசிலா said...

அங்கவை - சங்கவை!
அப்படித்தானூங்கள?
இன்னா?
தப்பா புரிஞ்சிக்கினீங்களா?
ரெண்டு பேரும் இந்தியர்னு சொல்ல வந்தேனுங்க!
ஹி!ஹி!ஹி!

அவனுவனும் கோமனத்த அவுக்குற நேரத்த பொறுத்து தாம்பா இந்தியாவின் தல விதியே அமையுது.

இத்தாலியில அவுக்குற கோமன நாத்தம் இந்தியா வரைக்கும் அடிக்குது போ.

இதுதான் பாரின் மெட் கோமனமா?

பாரின்னா பாரிந்தான்!

ஜெய் ஹிந்த்!

-o❢o-

b r e a k i n g   n e w s...