.

Tuesday, August 21, 2007

பிரதீபா பட்டீல் - புதிய குற்றச்சாட்டு

குடியரசுத்தலைவர் வேட்பாளராக பிரதீபாபட்டீல் அறிவிக்கப்பட்ட போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. அவர் உறவினர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பிரதீபா பட்டீல் அதை மறுத்தார். என்றாலும் எதிர்க்கட்சிகள் திரும்ப திரும்ப அதே குற்றச்சாட்டுகளை கூறி வந்தன.

பின்னர் அவர் வெற்றி பெற்று குடியரசின் தலைவர் ஆனார். தற்போது பிரதீபாபட்டீல் குடியரசுத்தலைவர்மாளிகையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இப்போதும் அவர் மீது புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், ஏற்கனவே அவருக்கு கீழ் பணிபுரிந்தவர்களையும் வேலைக்குச் சேர்த்து வருகிறார் என்ற புகார் எழுந்துள்ளது. இம்மாளிகை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் விக்ராந்த்தத்தா. இவர் பிரதீபா பட்டீல் ராஜஸ்தான் மாநிலத்தில் கவர்னராக இருந்த போது விமானப் படை அதிகாரியாக இருந்தவர்.

தேர்தல் பிரசாரத்தின் போது இவரைப் பற்றிய செய்திகள் வெளியானது. எனவே ஜெய்ப்பூர் விமானப்படைபணிக்கு அனுப்பப்பட்டார். பிரதீபா குடியரசுத்தலைவரான பிறகு மீண்டும் அவருடைய சிறப்பு அதிகாரியாக விக்ராந்த் தத்தா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக குடியரசுத்தலைவரின் செயலாளரிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கு
கடிதம் எழுதப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மாலைமலர்

1 comment:

Anonymous said...

ஆழியூரான், கோழியூரான் மாதிரி ஆட்கள் கலாமை திட்டினார்களே, இந்த கொடுமைக்கெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்?

-o❢o-

b r e a k i n g   n e w s...