ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
தினமலர்
Sunday, September 2, 2007
இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.
Labels:
அறிவியல்,
இந்தியா,
சாதனை,
தொழில்நுட்பம்
Posted by வாசகன் at 5:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
இன்று மாலை 04 31 மணிக்கு ஏவப்படுவதாக இருந்த ஜிஎஸ்எல்வி04 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலில் 05 21 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக 0610 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (தினமலர்)
Post a Comment