எண்ணெய் நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிப்பதற்கு முன்பாக பெட்ரோல், டீசல், உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் கடன் பத்திரங்கள் வெளியிடுதல் தொடர்பாக எந்த முன்நிபந்தனையும் இல்லை. நாள்தோறும் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இதன் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் உத்தேசித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிறுவனங்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்தாமல் இருப்பதால் நாள்தோறும் ரூ.185 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால், விலைகளை உயர்த்தி பொதுமக்களின் தலைகளில் சுமைகளை ஏற்ற வேண்டாம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் சில சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ள நிலையில் இவற்றில் இருந்து 5 சதவீத பங்குகளை அரசு சார்பில் பெற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து வேற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
நஷ்டக் கணக்குகள்: கடந்த பிப்ரவரியில் எண்ணெய் விலைகள் ஏற்றப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டன. இதில், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1-ம் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் காட்டும் நஷ்டக் கணக்குகள் வருமாறு:
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5.88-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4.80-ம், எல்.பி.ஜி. சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.189.14-ம், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14.63-ம் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளன.
விலைகளை ஏற்ற தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருவதால் இதன் விலைகள் ஏற்றப்படுவது மத்திய அரசின் முடிவில் உள்ளது. விலையேற்றத்துக்கு இடதுசாரிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பும். இதையும் மீறி அல்லது அனுசரித்தே தான் விலையேற்றங்கள் இருக்கலாம்.
தினமணி
Sunday, September 2, 2007
மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?
Posted by வாசகன் at 5:59 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment