.

Sunday, September 2, 2007

அமெரிக்க ஓப்பன்: சில வெற்றி தோல்விகள்.

அமெரிக்க ஓப்பன் கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையுமான மரியாஷரபோவா(ரஷியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். போலந்தை சேர்ந்த அக்னீஸ்கா 6-4, 1-6, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார்.

இதே போல 7-ம் நிலை வீராங்கனையான நாடியா பெட்ரோவாவும் (ரஷியா) தோல்வி அடைந்தார்.

மேலும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் 16-வது இட வரிசையில் இருப்பவருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) 6-3, 1-6, 0-6 என்ற கணக்கில் பெலாரசை சேர்ந்த விக்டோரியாவிடம் தோற்றார்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சாவும் 3-வது சுற்றோடு வெளியேறினார். அவர் 2-6, 3-6 என்ற கணக்கில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை அனாவிடம் வீழ்ந்தார்.

உலகின் முதல் நிலை வீரரான ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-7(4-7), 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஜானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ரோட்டிக் (அமெரிக்கா), நிக்கோலி (ரஷியா), டோமி ஹால் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஒற்றையர் பிரிவில் தோற்ற சானியா இரட்டையர் பிரிவில் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறி விட்டார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் முன்னேறி உள்ளார். சானியாமிர்ஸா- மகேஷ்பூபதி இணை குளோவின் (பிரான்ஸ்)- பாப்பிரையன் (அமெரிக்கா) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதே போல லியாண்டர் பெயஸ் (இந்தியா) -சுகுனசி (அமெரிக்கா) இணை 7-6, 6-3 என்ற கணக்கில் பெஸ்சாக்- மார்ட்டின் டாம் (செக்குடியரசு) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் மகேஷ்பூபதி- ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை 2-வது சுற்றில்
தோற்றுவிட்டது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...