7-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பலவீனமான இலங்கையை எதிர்கொண்டது.
இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. 20-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் அதிக கோல்கள் சாதனையை இந்தியா சமன் செய்தது. 1994 ஆண்டு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி 20-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 20-0 என்ற கணக்கில் தாய் லாந்தையும் வென்று இருந்ததே சாதனையாகும்.
இந்திய அணியில் பிரப் ஜோத்சிங் அதிகபட்சமாக 5 கோல்கள் (ஹாட்ரிக்) அடித் தார். எஸ்.வி.சுனில் (ஹாட்ரிக்), துஷார் சன்டேகர், ரகுநாத் ஆகியோர் தலா 3 கோல்களும், இக்னேஸ் திர்கே, சிவேந்திரா சிங் தலா 2 கோல்களும், பிரபோத் திர்கே, ராஜ் பால சிங் தலா ஒரு கோலும் அடித் தனர். பிரப்ஜோத்சிங் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. மற்ற ஆட்டங்களில் கொரியா 16-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 13-1 என்ற கணக்கில் ஆங்காங் கையும், சீனா 6-0 என்ற கணக் கில் வங்காள தேசத்தை தோற்கடித்தன.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொரியாவை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது.
கொரியா அணி பலம் வாய்ந்தது. இதனால் அந்த அணியை சமாளிக்க இந்தியா மிகவும் கடுமையாக போராட வேண்டும். கொரியா 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா ஒரு முறைதான் 2003-ல் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.
ஆசிய கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், கொரியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் `சமன்' ஆனது. 1985ம் ஆண்டு இந்தியா 8-1 என்ற கணக்கிலும், 1989ம் ஆண்டு 5-0 என்ற கணக்கிலும், 2003-ம் ஆண்டு அரை இறுதியில் 4-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இருந்தது. கொரியா 1994-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் 1999ம் ஆண்டு அரை இறுதியில் 5-4 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 1994-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் `சமன்' ஆனது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் வங்காள தேசம்-இலங்கை (காலை 7.30) சீனா-தாய்லாந்து (9.30), ஜப்பான்- ஆங்காங் (மாலை 3 மணி), பாகிஸ்தான்- சிங்கப்பூர் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன. நாளைய ஆட்டங்கள் அனைத் தும் எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
மாலைமலர்
Sunday, September 2, 2007
ஆசிய கோப்பை ஹாக்கி: நாளை இந்தியா-கொரியா மோதல்
Labels:
இந்தியா,
விளையாட்டு
Posted by வாசகன் at 6:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment