.

Sunday, September 2, 2007

கர்நாடக மாநில விருதை அப்துல்கலாம் புறக்கணிக்கக் கோரிக்கை

கர்நாடக மாநிலத்தின் விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெறக் கூடாது என்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் கூறியுள்ளது.

இந்த மன்றத்தின் நிறுவனர் பெ. பராங்குசம் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநில அரசின் உயரிய விருதான பசவாசிறீ விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விருதில் ரூ. 10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் ஒரு தமிழர். குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியனாகவும், தேசியவாதியாகவும் இருந்தார். இவருக்குப் பிடித்த நூல் திருக்குறள்.

திருக்குறள் எழுதிய திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் பல ஆண்டுகளாக சாக்குப் பையால் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. சிலை திறக்க முடியாமல் இருக்கிறது. கன்னடர்கள் சிலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அதனால் இந்த விருதை பெறுவதற்கு முன் திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பராங்குசம்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...