அணுஆயுத ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு நவம்பர் மாதம் டெல்லி வருகிறார்.
இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்க அரசியலில் அதிரடியாக குதித்தார். அரசியலில் அமோக வெற்றி அவருக்குக்கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக கலிபோர்னியா மாநில கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் அர்னால்டு வருகிற நவம்பர் மாதம் தனது குடும்பத்தாருடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அப்போது அவர் டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். அரசியல் நல்லெண்ண தூதராகவும், அணுஆயுத விவகாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்காவிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் இந்தியா வருகிறார்.
எனவே அவர் டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
Sunday, September 2, 2007
அர்னால்டு இந்தியா வருகிறார்
Posted by வாசகன் at 6:18 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment