.

Monday, September 3, 2007

பங்களாதேஷ்: கலிதா ஜியா கைது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, அவரது இளைய மகன் அராபத் ரகுமான் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். முன்னதாக, கலிதா ஜியா கடந்த 2001-2006ம் ஆண்டுவரை பதவியில் இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மகன் அராபத் ரஹ்மான் பண்ணைக்கு ஆள் எடுக்க உதவியதாக பங்களாதேஷ் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கலிதா ஜியா மீது நேற்றிரவு வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து இக்கைதுகள் நிகழ்ந்தன.

பங்களாதேஷ் தேசிய வருவாய் வாரியத்தின் நடுவண் புலனாய்வுக் குழு அண்மையில் இவர்களது வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கலிதா ஜியா உட்பட 11 பேரின் வங்கிக் கணக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.45 மணியளவில், டாக்கா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கலிதாவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அவரையும், அவரது மகனையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை; சிறைச் செல்ல தாம் பயப்படவில்லை
என்று கலிதா ஜியா கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...