ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக் கோள் இன்சாட் 4சி ஆர் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக விண்ணில் மாலை 6.20 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மாதவன் நாயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இன்சாட் - 4 சி ஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Monday, September 3, 2007
இன்சாட் விண்ணேவல் வெற்றிகரம்: தலைவர்கள் வாழ்த்து.
Labels:
அறிவியல்,
இந்தியா,
தொழில்நுட்பம்
Posted by வாசகன் at 2:13 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment